தடை செய்யப்பட்ட பொருள்களை வடகொரியாவிற்கு விநியோகித்த ஆடவரின் சிறை தண்டனை இரட்டிப்பானது

வட கொரி­யா­விற்கு கிட்­டத்­தட்ட $576,000 மதிப்­புள்ள தடை­செய்­யப்­பட்ட ஆடம்­ப­ரப் பொருள்­களை விநி­யோ­கித்த மூன்று நிறு­வ­னங்­களின் இயக்­கு­நரின் சிறைத்­தண்­டனை இரட்­டிப்­பா­கி­யுள்­ளது.

அந்த வழக்­கின் மேல்­மு­றை­யீட்­டைத் தொடர்ந்து, அவ­ரது சிறைத்­தண்­டனை மூன்று வாரங்­களில் இருந்து ஆறு வாரங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

மூன்று நிறு­வ­னங்­க­ளுக்­கும் விதிக்­கப்­பட்ட அப­ரா­தம் இரண்டு மடங்கு அல்­லது மூன்று மடங்­காக உயர் நீதி­மன்­றத்­தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­விக்­கப்­பட்­டது.

எஸ்­சி­என் சிங்­கப்­பூர், சின்­டோக் டிரே­டிங், லாரிச் இன்­டர்­நே­ஷ­னல் ஆகிய மூன்று உள்­ளூர் நிறு­வ­னங்­களின் முக்­கிய முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரி­யாக சிங்­கப்­பூ­ர­ரான 61 வயது சோங் ஹாக் யென் (படம்) இருந்­தார். மேலும் ஒவ்­வொரு நிறு­வ­னத்­தி­லும் அவர் குறைந்­தது 95 விழுக்­காட்டு பங்­கு­களை வைத்­தி­ருந்­தார்.

டிசம்­பர் 2010க்கும் நவம்­பர் 2016க்கு இடை­யில், அந்த நிறு­வனங்­கள் வட­கொ­ரி­யா­விற்கு வாச­னைத் திர­வி­யங்­கள், அழ­குச் சாத­னப் பொருள்­கள், கைக்­க­டி­கா­ரங்­கள், இசைக்­க­ரு­வி­கள் ஆகி­ய­வற்றை ஏற்றுமதி செய்தன. அந்த வர்த்­த­கத்­தில் அந்­த நி­று­வ­னங்­களுக்குக் கிடைத்த மொத்த லாபம் $122,000.

வட­கொ­ரி­யா­விற்கு எதி­ரான ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பொரு­ளி­யல் தடை­களை நடை­மு­றைப்­படுத்த இயற்­றப்­பட்ட சிங்­கப்­பூர் சட்­டத்­தின்கீழ், குடி­ய­ர­சில் உள்ள ஒருவரோ அல்­லது நாட்­டிற்கு வெளியே உள்ள சிங்­கப்­பூ­ரர்­களோ தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நாட்­டில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு குறிப்பிட்ட பொருள்­களை வழங்­கவோ அல்­லது விற்­கவோ தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு மற்­றும் நற்­பெ­ய­ருக்கு குறிப்­பி­டத்­தக்க தீமை விளை­வித்­த­தா­லும், சில ஆண்­டு­க­ளாக இந்­தக் குற்­றச்­செயல்­கள் நடந்­த­தா­லும் இன்­னும் கணி­ச­மான தண்­டனை வழங்­கப்­பட வேண்­டும்," என்று சோங்­கின் சிறைத்­தண்­ட­னையை உயர்த்­திய உயர் நீதி­மன்ற நீதி­பதி ஐய்டிட் அப்­துல்லா கூறி­னார்.

"இது நன்கு திட்­ட­மி­டப்­பட்ட செயல். அது குற்­றத்­தின் அள­வை­யும் உயர்த்­தி­யதுடன், இதில் கணி­ச­மான லாப­மும் கிடைத்­துள்­ளது. ஆகவே தண்­டனை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் நீதி­பதி அப்­துல்லா விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!