கொவிட்-19 சூழலில் 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் விவாகரத்துகள் இரண்டு விழுக்காடு அதிகரித்தன. இதே காலக்கட்டத்தில் குடும்ப வன்முறை சம்பவங்களும், நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட குடும்பப் பராமரிப்புச் சம்பவங்களும் குறைந்தன.
இன்று இடம்பெற்ற குடும்ப நீதிமன்றங்கள் வேலைதிட்டக் கருத்தரங்கில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
விவாகரத்துகள் அதிகரித்திருந்தாலும், பெரும்பாலானவை இருதரப்பும் இணக்கமான முறையில் செய்துகொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது. இவ்வாறு செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 60 விழுக்காடாக இருந்தது. சென்றாண்டு இந்த விகிதம் 63 விழுக்காடு உயர்ந்தது.
குடும்ப நீதிமன்றங்களை நாடுபவர்களுக்கு உதவு கூடுதல் வசதிகள், தொழில்நுட்பம் போன்றவைற்றை அறிமுகம் செய்ய திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
குடும்ப நீதிமன்ற செயல்பாடுகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைபடுத்துவது, ஒருவரின் சட்ட உரிமைகளை எடுத்துக் கூறுவது, மின்னியல் சேவைகள் ஆகியவற்றை நடைமுறைபடுத்த குடும்ப நீதிமன்றங்கள் திட்டமிட்டுள்ளது.

