உக்ரேனுக்கும் ரஷ்யா மீது சிங்கப்பூர் விதித்த தடைக்கும் சிங்கப்பூரர்கள் ஆதரவு

உக்­ரேன் மீது ரஷ்யா படை­ எடுத்து இருக்­கிறது. இந்த நிலையில் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்கள் உக்­ரே­னுக்கு ஆத­ரவு தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

மாஸ்கோ மீது தடை விதிப்பது என்று சிங்­கப்­பூர் எடுத்த முடிவு சரி­யா­னது என்று 10 பேரில் ஆறு பேர் ஒப்­பு­க்கொள்­கி­றார்­கள்.

இணை­யம் வழி மார்ச் 9, 10ஆம் தேதி­களில் நடத்­தப்­பட்ட ஓர் ஆய்­வின் மூலம் இந்த நில­வரம் தெரி­ய­வ­ரு­கிறது.

அந்த ஆய்­வில் 1,711 சிங்­கப்­பூ­ரர்­கள் பேட்டி காணப்­பட்­ட­னர். அவர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் உக்­ரே­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர். அல்­லது பரி­தா­பப்­பட்­ட­னர் என்று 'பிளாக்­பாக்ஸ் ரிசர்ச்' என்ற அந்த ஆய்வு தெரி­வித்­தது.

நேட்டோ அமைப்­பில் சேர உக்ரேன் முயல்­வ­தா­கக் கூறி அதை எதிர்த்து அந்த நாட்­டின் மீது ரஷ்யா பிப்­ர­வரி 24ஆம் தேதி படை­யெ­டுத்­தது.

அதை உலக நாடு­கள் பல­வும் கண்­டித்து ரஷ்­யா­வுக்கு எதி­ராக கடு­மை­யான தடையை அமல்­படுத்தி இருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரும் ரஷ்­யா­வுக்கு எதி­ராக தடை­களை விதித்­தது. இதை ஆய்­வில் கலந்­து­கொண்ட 60 விழுக்­காட்­டி­னர் ஆத­ரித்­த­னர். தங்­க­ளுக்கு நிச்­ச­ய­மா­கத் தெரியாது அல்­லது கருத்து எதுவும் தங்­க­ளி­டம் இல்லை என்று 35 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

அந்த ஆய்வு ஆஸ்­தி­ரே­லியா, சீனா, இந்­தியா, சிங்­கப்­பூ­ரில் 18க்கும் அதிக வய­துள்ள மொத்தம் 6,920 பேரை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்­டது.

ஆய்­வில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் 4 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் ரஷ்­யாவை ஆத­ரிப்­ப­தாக கூறி­னர்.

ஆஸ்­தி­ரே­லியா, இந்­தி­யாவை பொறுத்­த­வரை 10 பேரில் கிட்­டத்­தட்ட ஒன்­பது பேர் உக்­ரேனை ஆத­ரிப்­ப­தாக தெரி­வித்­த­னர்.

சீனாவை பார்க்­கை­யில், 3 விழுக்­காட்­டி­னர் ரஷ்­யா­வுக்கு ஆதரவு தெரி­வித்­த­னர். 71 விழுக்­காட்­டி­னர் உக்­ரேன் மீது பரி­தா­பப்­பட்­ட­னர். தங்­க­ளு­டைய அரசு நிலை பற்றி தாங்­கள் எந்த முடிவை­யும் எடுக்­க­வில்லை என்று சீனா­வில் 10 பேரில் எட்டு பேருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கூறி­னர்.

பத்து சிங்­கப்­பூ­ரர்­களில் கிட்­டத்­தட்ட ஏழு பேர் உக்­ரேன் நெருக்­க­டிக்கு ரஷ்­யாவே கார­ணம் என்று தெரி­வித்­த­னர்.

சீனா­வில் இது பற்றி தங்­களுக்குத் தெரி­யாது என்று கூறி­ய­வர்­கள் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர். அமெ­ரிக்­கா­தான் கார­ணம் என்று சீனா­வில் 3% தெரி­வித்­தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!