கொவிட்-19 அன்றாட, வாராந்திர தொற்று அளவு குறைந்தது

கொவிட்-19 அன்றாட, வாராந்திர தொற்று அளவு குறைந்தது

1 mins read
99a1e99c-d2ec-47ba-8960-c9ae10659dd6
-

சிங்­கப்­பூ­ரில் வியா­ழக்­கி­ழமை புதிதாக 10,713 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­னது. இது அதற்கு முந்­திய நாளின் அள­வை­விட குறைவு.

வியா­ழக்­கி­ழமை நண்­ப­கல் நில­வ­ரப்­படி 1,230 பேர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வந்­த­னர். இது­வும் முந்­திய நாளின் அள­வை­விட குறைவு என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் புதி­தாக 12 பேர் மர­ணம் அடைந்­த­னர். இந்த எண்­ணிக்கை முந்­திய நாளான புதன்­கி­ழமை 11 ஆக இருந்­தது.

மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்சை பிரி­வில் 29 பேர் இருந்­த­னர். 146 பேருக்கு உயிர்­வாயு சிகிச்சை தேவைப்­பட்­டது.

உள்­ளூ­ரில் கிருமி தொற்­றி­யோ­ரில் 9,425 பேருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் தொற்று தெரி­ய­வந்­தது. இதர 1,160 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் தொற்று தெரி­ய­வந்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­களில் 128 பேருக்­குத் தொற்று இருந்­தது. இவர்­களில் 38 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் தொற்று தெரி­ய­வந்­தது. இதர 90 பேருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் தொற்று தெரிந்தது.

வியா­ழக்­கி­ழமை வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் 0.73 ஆகக் குறைந்­தது. இது முந்­திய நாளில் 0.76 ஆக இருந்­தது. கொவிட்-19 கிருமி தொற்­றி­யோரின் மொத்த எண்­ணிக்கை 986,320 ஆக இருந்­தது. மொத்த மரண எண்­ணிக்கை 1,182 ஆகியது.