எஸ்எம்ஆர்டி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

எஸ்எம்ஆர்டி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

1 mins read
1c1e85c3-fe42-4127-bf04-fbfbc6b3f070
புதிய தலைமை நிர்வாகி திரு ஜியன் ஹுன் பிங் (இடது).இப்போதைய தலைமை நிர்வாகி திரு நியோ கியன் ஹோங். படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ எஸ்எம்ஆர்டி -

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான நியோ கியான் ஹோங் பதவி வில­கு­கிறார். அவர் அந்­தப் பொறுப்­பில் நான்கு ஆண்­டு­கள்­தான் இருந்­துள்­ளார்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் முன்­னாள் தலை­வ­ரான ஜியன் ஹுன் பிங், திரு நியோ­வி­டம் இருந்து எஸ்­எம்­ஆர்டி குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி பொறுப்பை ஏற்­பார் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் தலை­மைப் பொறுப்­பில் டெஸ்­மண்ட் குவெக் இருந்­தார்.

அவ­ரி­டம் இருந்து அந்­தப் பொறுப்பை 2018 ஆகஸ்ட்­டில் திரு நியோ ஏற்­றார்.

திரு ஜியன் 2020ல் நிலப் போக்குவ­ரத்து ஆணை­யத்­தில் இருந்து விலகி ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் விநி­யோ­கக் கட்­ட­மைப்­புத் தொழில்­து­றை­யில் பொறுப்பு ஏற்றார். இவர் எஸ்எம்ஆர்டி நிர்­வாக சபை­யில் மே 1ஆம் தேதி சேர்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி தலைமை நிர்­வாக அதி­காரி பொறுப்பு ஏற்­பார்.

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் நேற்று தனது நிறு­வ­ன அறி­விப்பை விடுத்­தது. அதில் இந்த விவ­ரங்­கள் உள்­ளன.

பதவி வில­கி­னா­லும் திரு நியோ, இந்த ஆண்டு அக்­டோ­பர் 31ஆம் தேதி­ வரை ஆலோ­ச­கராக தொடர்ந்து இருந்து வரு­வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.