'சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நம்பிக்கை, ஒளிவுமறைவு இல்லாத நிலை உயிர்நாடியானவை'

'சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நம்பிக்கை, ஒளிவுமறைவு இல்லாத நிலை உயிர்நாடியானவை'

2 mins read
ddd80ab5-979c-4962-ac39-27022b135435
-

தொழில்­நுட்­ப­மும் சமூக ஊட­க­மும் வாழ்க்­கை­யில் இப்­போது அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. என்­றா­லும்­கூட சட்ட அம­லாக்க அமைப்­பு­க­ளைப் பொறுத்­த­வரை, நம்­பிக்­கை­யும் ஒளி­வு­ம­றைவு இல்லாத நிலை­யும் இன்­ன­மும் உயிர்­நா­டி­யா­னவை என்று வலி­யுறுத்­தப்­பட்டு உள்­ளது.

அமெ­ரிக்க சுங்­கம் மற்­றும் எல்லைப் பாது­காப்புத் துறை­யின் முன்­னாள் ஆணை­யர் கில் கெர்லி­கௌஸ்கி இவ்­வாறு தெரி­வித்து இருக்­கி­றார்.

நம்­பிக்­கையைத் தொடர்ந்து நிலை­நாட்டி வர தவ­றி­னால் எந்­த­வொரு காவல் துறை­யின் மதிப்பும் மரி­யா­தை­யும் போய்­வி­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

அந்த முன்­னாள் ஆணை­யர் மார்ச் 1ஆம் தேதி 200க்கும் மேற்­பட்ட உள்­து­றைக் குழு அதி­கா­ரி­களுக்கு 'ஸூம்' செயலி மூலம் விரி­வு­ரை­யாற்­றி­னார்.

திரு கெர்­லி­கௌஸ்கி, 72, உள்­து­றைக் குழு பயி­ல­கத்­தின் ஆலோ­சனைக் குழு­வில் இடம்­பெற்று இருக்­கி­றார். அவ­ருக்கு 40 ஆண்டு­கால சட்ட அம­லாக்­கத் துறை அனு­ப­வம் உண்டு.

உள்­து­றைக் குழு தலை­வர்­களுக்­கா­க­வும் அதி­கா­ரி­க­ளுக்­கா­க­வும் பாது­காப்பு, தலை­மைத்­து­வம் ஆகிய துறை­களில் உல­க­ள­வில் பிர­ப­ல­மான வல்­லு­நர்­களை அழைத்து உரை நிகழ்ச்­சி­களை இந்­தப் பயி­ல­கம் வழக்­க­மாக நடத்தி வரு­கிறது.

இதை­யொட்டி திரு கெர்­லி­கெளஸ்கி அழைக்­கப்­பட்­ட­தாக இந்­தப் பயி­ல­கத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான அன்­வர் அப்­துல்லா தெரி­வித்­தார்.

சட்ட அம­லாக்க அமைப்பு எந்த அள­வுக்­குப் பெரி­ய­தாக இருந்­தா­லும் அது ஒரு பிரச்­சினை அல்ல. அந்த அமைப்பு தாங்­கள் சேவை­யாற்­றும் மக்­க­ளி­டம் நம்­பிக்கை, ஒத்­து­ழைப்பை இழந்­து­விட்­டால் ஆற்­ற­லு­டன் திகழ முடி­யாது என்று மார்ச் 2ஆம் தேதி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு ஸூம் செயலி மூலம் பேட்­டி­ய­ளித்த அந்த முன்­னாள் ஆணை­யர் குறிப்­பிட்­டார்.

சட்ட அம­லாக்­கத் துறை­யைச் சேர்ந்த பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் பணி எப்­படி மேம்­பட்டு வந்து இருக்­கிறது என்­பது பற்­றிய தனது அனு­பவங்­களை அவர் பகிர்ந்­து­கொண்டார். சட்ட அம­லாக்க அமைப்­பு­களில் நம்­பிக்­கையைப் பலப்­ப­டுத்­து­வது எப்­படி என்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

முன்­பெல்­லாம் பெரும்­பா­லான காவல்­துறை பயிற்­சி­களில் கைது நட­வ­டிக்­கை­க­ளில்­தான் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­பட்­டது. இப்­போது ஒரு­வ­ரின் கண்­ணோட்­டத்தைப் புரிந்­து­கொள்­வ­தில் அதிக கவ­னம் செலுத்­தப்படு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

சுற்­றுச்­சூ­ழல் பெரி­தும் மாறி­விட்­டது. சட்ட அம­லாக்க அமைப்­பு­களில் இளை­யர்­கள் அதி­கம் சேர்­கி­றார்­கள் என்­பதை அவர் சுட்­டிக்­காட்டினார்.

இந்த நிலை­யில், முதிய பயிற்று­விப்­பா­ளர்­க­ளுக்­கும் இளம் தலை­முறை மாண­வர்­க­ளுக்­கும் இடை­யில் ஒத்­து­ழைப்பு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மா­னால் இந்த இரண்டு குழு­வி­ன­ரும் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்­குச் செவி­சாய்க்க வேண்­டும் என்று அவர் கூறினார்.

தங்­கள் சகாக்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டு மற்­ற­வர்­க­ளோ­டும் உறவைப் பேணி வளர்ப்­ப­தில் அவர்­கள் அதிக கவ­னத்­தைச் செல­விட வேண்­டும் என்­றார் அவர்.

வீதி­களில் விவே­க­மாக நடந்­து­கொள்­வது எப்­படி என்­பதை முதிய அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து இளம் அதி­கா­ரி­கள் கற்­றுக்­கொள்ள வேண்­டும். அதே­போல, முதிய அதி­கா­ரி­கள் அச்­சப்­ப­டா­மல் தொழில்­நுட்­பங்­க­ளைக் கைக்­கொள்ள வேண்­டும் என்று அவர் கூறினார்.