சமூகப் பொறுப்புடன் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன்

சமூகப் பொறுப்புடன் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன்

2 mins read
d62dd103-8db1-4d72-af8f-4eaf2dfbb0c5
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெரிக் கோவுடன் (நடுவில்), சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (இடம்). படம்: திமத்தி டேவிட் -

கி.ஜனார்த்­த­னன்

வழி­பாட்­டுத் தலங்­களில் கிரு­மிப்

பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் பங்­குனி உத்­தி­ரத் திரு­வி­ழா­வில் மக்­கள் தொடர்ந்து

புரிந்­து­ணர்வுடன் நடந்தகொண்ட விதம், தலை­வர்களின் பாராட்­டைப் பெற்­றுள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின் தொடக்­கத்­திற்­குப் பிறகு இரண்­டா­வது முறை­யா­கப் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளு­டன் புனித மரம் பால­சுப்பி­ர­ம­ணி­யம் ஆல­யத்­தின் பங்­குனி உத்­தி­ரத் திரு­விழா நடை­பெற்­றது. தற்­போ­தைய கொவிட்-19 சூழ்­நி­லை­யில் இவ்­வாண்­டும் பால்குடங்­க­ளுக்கு

மட்­டுமே அனு­மதி தரப்­பட்­டது. பக்­தர்­கள் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு முதல் நேற்று நண்­ப­கல் வரை தங்­க­ளது நேர்த்­திக்­க­ட­னைச் செலுத்­தி­னர். கிட்­டத்­தட்ட 10,000 பக்­தர்­களும் 150 தொண்­டூ­ழி­யர்­களும் திரு­வி­ழா­வில் பங்­கு­பெற்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19

கிரு­மிப் பர­வல் தொடங்­கிய 2020ஆம் ஆண்­டில் அந்­தத் திரு­வி­ழா­வில் பொது­மக்­கள் கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டா­ததை அடுத்து, மறு­ஆண்­டில் பால்­கு­டங்­கள் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­டன. கடந்த ஆண்டு போலவே இவ்­வாண்­டி­லும் அலகு காவடிகளுக்கு அனு­ம­தி­யில்லை. ஆனால் முடிக் காணிக்கை செலுத்­து­தல்

அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்­டில் பால் குடம் எடுக்­கும் பக்­தர்­கள் 3,500 முதல் 4,000 வரை­யி­லும் பொது பக்­தர்­கள் 3,000 முதல் 3,500 வரை­யி­லும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். முன்­ப­திவு செய்­த­வர்­கள் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும். ஆல­யத்­தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் பால்­கு­டங்­

க­ளையே பக்­தர்­கள் செலுத்த வேண்­டும் என்று ஆல­யம் விதி­முறை விதித்­தி­ருந்­தது. பால்­கு­டத்­திற்­கா­கப் பதிவு செய்பவர்­கள், கூடு­த­லாக தங்­க­ளு­டன் செல்ல விரும்­பும் ஒரு­வ­ருக்­கா­கப் பதிவு செய்­ய­லாம். ஆலய தரி­ச­னத்­திற்­கும் முன்­ப­திவு தேவைப்­பட்டது. தரி­ச­னத்­திற்­காக செல்ல விரும்­பும் பக்­தர், தான் உட்­பட அதி­க­பட்­ச­மாக ஐந்து பேர் வரை பதிவு செய்­ய­லாம். ஆலய வழி­பாட்­டுத் தலங்­களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் மக்­க­ளின் விழிப்­பு­நிலை தள­ர­வில்லை என்று திரு­வி­ழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ரும் நீ சூன் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற

உறுப்­பி­ன­ரு­மான திரு டெரிக் கோ தெரி­வித்­தார். மக்­கள் பாது­காப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வரு­வ­தைக் கண்டு மகிழ்­வ­தா­கக் கூறிய திரு கோ, மக்­களில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தால் பங்­குனி உத்­தி­ரம் போல திரு­வி­ழாக்­கள் கோலா­க­ல­மாக நடை­பெ­று­வ­தா­கக் கூறி­னார்.

"ஏற்­பா­டு­கள் மிகச் சிறப்­பாக நடை­பெற்­றன. இதில் கலந்­து­கொள்­ளும் வாய்ப்­பைப் பெற்­ற­தில் நான் மகிழ்ச்சி அடை­கி­றேன்," என்று திரு கோ, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். விழா­வின்­போது வருகை அளித்­தி­ருந்த சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், பக்­தர்­க­ளின் அமை­தி­யை­யும் கட்­டுக்­கோப்­பை­யும் பாராட்­டி­னார். கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் என்ற முறை­யில் இங்கு வந்­த­தா­கக் கூறிய திரு சண்­மு­கம், கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­போ­தும் அனை­வ­ரும் வரி­சை­யில் நின்று பொறு­மை­யு­டன் இறை தரி­ச­னம் செய்­த­தைத் குறிப்­பிட்­டார். மெல்ல இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பு­வ­தில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­ப­டு­வதை கோயில் சூழல் காட்­டு­வ­தாக அவர் கூறி­னார். இரண்­டா­வது முறை­யாக பங்­குனி உத்­தி­ரத்­திற்­காக பால்­கு­டம் ஏந்­திய நீ சூன் குழுத்­தொ­குதி ­யின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கேரி டான், மக்­க­ளுக்கு ஆறு­

த­லை­யும் உறு­தி­யை­யும் இத்­த­கைய சம­யத் திரு­வி­ழாக்­கள் தரு­வ­தா­க­வும் இத்­தி­ரு­வி­ழாக்­கள் தொடர்­வ­தற்­காக மக்­கள் அனை

வரும் கைக்­கோத்து செயல்­ப­ட­வேண்­டும் எனக் கூறி­னார்.