கண்ணன், ராஜமாணிக்கம் மீதான வாழ்நாள் தடை நீக்கப்பட்டது

கண்ணன், ராஜமாணிக்கம் மீதான வாழ்நாள் தடை நீக்கப்பட்டது

2 mins read
2279bc32-916b-44e6-b896-d687d4c52a98
ஊழலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கே. கண்ணன் (இடம்), திரு ராஜமாணிக்கம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நீக்கியது.படங்கள்: கே. கண்ணன், திரு ராஜமாணிக்கம் -
multi-img1 of 2

முன்­னாள் தேசிய காற்­பந்து ஆட்­டக்­கா­ரர் கே. கண்­ணன், காற்பந்து நடு­வர் திரு ராஜ­மா­ணிக்­கம் ஆகி­யோர் மீதான வாழ்­நாள் தடையை சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் நீக்­கி­யது.

தங்­கள் மீதான தடையை நீக்­கக் கோரி இரு­வ­ரும் எழுத்­து­பூர்­வ­மா­கக் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சங்­கம் கூறி­யது.

பணம் பெற்­றுக்­கொண்டு காற்­பந்து ஆட்­டங்­களின் முடிவை முன்­கூட்­டியே நிர்­ண­யிக்­கும் குற்­றத்­தில் ஈடு­பட்டு, நேர்­மை­யற்ற வகை­யில் நடந்­து­கொண்­ட­தற்­காக 1994ஆம் ஆண்­டில் ராஜ­மா­ணிக்­கம் மீதும் 1995ஆம் ஆண்­டில் கண்­ணன் மீதும் வாழ்­நாள் தடை விதிக்­கப்­பட்­டது.

இரு­வ­ரின் மேல்­மு­றை­யீட்டை சங்­கம் மிகத் தீவி­ர­மாகப் பரி­சீ­லித்­த­தாக அதன் தலை­வர் லிம் கியோ டோங் தெரி­வித்­தார்.

"இந்த இரு­வர் மீதான தடையை நீக்­கு­வ­தன் மூலம் காற்­பந்து தொடர்­பாக நிக­ழும் ஊழல்­க­ளுக்கு எதி­ராக சங்­கம் கடு­மை­யான நட­

வ­டிக்­கை­களை எடுக்­காது என்­றா­கி­வி­டாது. காற்­பந்­தில் ஊழல் குற்­றங்­கள் சகித்­துக்­கொள்­ளப்­ப­டாது. எங்­க­ளது இந்த நிலைப்­பாடு தொடர்­கிறது.

"ஊழல் குற்­றத்­தில் ஈடு­படும் விளை­யாட்­டா­ளர் அல்­லது அதி­காரி மீது சங்­கம் மிகக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்," என்று திரு லிம் தெரி­வித்­தார்.

தங்­கள் மீதான தடையை நீக்கக் கோரி 60 வயது கண்­ண­ணும் 70 வயது ராஜ­மா­ணிக்­க­மும் பல­முறை மேல்­மு­றை­யீடு செய்­த­தா­க­வும் அவை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­க­வும் சங்­கம் கூறி­யது.

1994ஆம் ஆண்டு மே மாதம் மலே­சிய லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ருக்­கும் பெர்­லி­சுக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர் ஒரு­வ­ருக்கு $80,000 லஞ்­சம் கொடுக்க இரு­

வ­ரு­டன் சேர்ந்து சதித் திட்­டம் தீட்­டி­ய­தற்­காக 1995ஆம் ஆண்­டில் கண்­ண­ணுக்கு வாழ்­நாள் தடை விதிக்­கப்­பட்­டது.

அதன்­படி காற்­பந்து ஆட்­டங்­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் அவ­ரால் ஈடு­பட முடி­யா­மல் போனது. இரு­வ­ரு­டன் சேர்ந்து சதித் திட்­டத்­தில் ஈடு­பட்ட குற்­றத்­துக்­காக கண்­ண­னுக்கு ஓராண்டு சிறைத் தண்­ட­னை­யும் $40,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. லஞ்­சம் வாங்­கிய குற்­றத்­துக்­காக அவ­ருக்கு 18 மாதச் சிறை­யும் $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

$1,000 லஞ்­சம் வாங்­கிய குற்­றத்­துக்­காக நடு­வர் பட்­டி­ய­லி

­லி­ருந்து ராஜ­மா­ணிக்­கம் நீக்­கப்­பட்­டார். அவ­ருக்கு வாழ்­நாள் தடை­யு­டன் எட்டு மாத சிறை­யும் $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

1994ஆம் ஆண்டு கிளந்­தா­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்­குச் சாத­க­மாக நடந்­து­கொள்­ளும் மலே­சிய நடு­வரை நிய­மிக்க ராஜ­மா­ணிக்­கத்­துக்கு லஞ்­சம் தரப்­பட்­டது. தமக்கு உத­விய

வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கி­ய­வர்­க­ளுக்­கும் கண்­ணன் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

"காற்­பந்­து­தான் எனது வாழ்க்­கை­யாக இருந்­தது. சமு­தா­யத்­துக்கு அர்த்­த­முள்ள வகை­யில் பங்­க­ளிக்க என்­னால் முடிந்­த­தைச் செய்­வேன்," என்று கண்­ணன் தெரி­வித்­தார்.

"காற்­பந்து தொடர்­பான மேம்­பாட்­டுத் திட்­டங்­களில் எனது

பங்­க­ளிப்பு இருக்­கும். நடு­வர் மன்­றத்­துக்கு எனது சேவை­கள் தேவைப்­பட்­டால் அதற்­கும் நான் தயார். என்­மீது விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­பட்­டி­ருப்­பது எனக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. எனது மேல்­மு­றை­யீட்டை ஏற்­றுக்­கொண்ட சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­துக்கு எனது நன்றி," என்­றார்

ராஜ­மா­ணிக்­கம்.