பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

1 mins read
aadd1608-3df7-47e0-ba9a-4af7a1fcb670
-

பெண்ட­மி­யர் சந்தை, உணவு நிலை­யத்­தில் நிகழ்ந்த சண்­டை

­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று நம்­பப்­படும் முதி­ய­வர் மீது பொது இடத்­தில் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

77 வயது இங் ஹுவி ஊ, அரி­வா­ளைக் காட்டி மிரட்­டி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

ஆயு­தத்­தைக் காட்டி மிரட்­டி­ய­தா­க­வும் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று மாலை 6.55 மணி அள­வில் பெண்டமி­யர் சாலை­யில் இரு­வர் சண்டை போட்­டுக்­கொண்­ட­தாக காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­தது.

ஆனால் அதி­கா­ரி­கள் அங்கு செல்­வ­தற்­குள் இரு­வ­ரும் அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், அடுத்த இரண்டு மணி நேரத்­துக்­குள் இங் கைது செய்­யப்­பட்­டார்.

இங் அரி­வா­ளைப் பயன்­ப­டுத்தி யாரை­யும் காயப்­ப­டுத்­த­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.