புதிய கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 10,594; தொடர்ந்து குறைந்துவரும் வாரந்திர தொற்று அதிகரிப்பு விகிதம்

புதிய கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 10,594; தொடர்ந்து குறைந்துவரும் வாரந்திர தொற்று அதிகரிப்பு விகிதம்

1 mins read
b8627a9a-6e7f-4cf8-92e9-6e169dd0c1db
மாண்டோரில் எட்டுப் பேர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 17ஆவது நாளாக நேற்று (மார்ச் 18) ஒன்றுக்கும் குறைவாகப் பதிவானது. வெள்ளிக்கிழமை அது 0.70ஆக இருந்தது. அதற்கு முந்திய நாளான வியாழக்கிழமை இந்த விகிதம் 0.73ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை புதிதாக 10,594 பேருக்குத் தொற்று உறுதியானது. கடந்த வெள்ளிக்கிழமை 15,345 பேருக்கு தொற்று உறுதியானது. வியாழக்கிழமை அன்று மொத்தம் 10,713 பேருக்கு தொற்று உறுதியானது.

வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி 1,175 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இது வியாழக்கிழமை அன்று 1,230ஆக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் எண்ணிக்கை 30ஆக உள்ளது. 137 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.

கொவிட்-19க்கு மேலும் 9 பேர் உயிரிழந்துவிட்டனர்.