தனியார் வாகன வாடகை சேவைகளை வழங்கும் கோஜெக் நிறுவனம் அதன் கட்டணங்களை மார்ச் 31ஆம் தேதி உயர்த்தவுள்ளது.
கோஜெக் வாகனங்களில் ஏறும்போது வசூலிக்கப்படும் ஆரம்பக் கட்டணம் உயரவுள்ளது.
அதன் கோகார் வாகனங்களில் ஆரம்பக் கட்டணம் 50 காசுகள் உயரும்.
விலை உயர்ந்த கோகார் ப்ரிமியம் (GoCar Premium)வாகனங்கள், பெரிய கார்களை வாடகைக்கு எடுக்கும் கோகார் எக்ஸ்எல் (GoCar XL) 80 காசு கூடும்.
அத்துடன் கோஜெக் அதன் எல்லா பயணங்களுக்கும் கூடுதலாக ஒரு தற்காலிகக் கட்டணத்தை வசூலிக்க உள்ளது.
பத்து கிலோமீட்டருக்குக் குறைவான பயணங்களுக்கு 50 காசையும் அதற்கும் அதிகமான பயணங்களுக்கு 80 காசையும் அது கூடுதலாக வசூலிக்கும்.
இது அதன் ஓட்டுநர்-பங்காளிகளின் வருமானத்துக்கு உதவ இந்த ஓட்டுநர் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கோஜெக் கூறியது.
உயர்ந்து வரும் எரிசக்தி. செயல்படும் செலவுகளைச் சமாளிக்க இந்தக் கட்டணம் உதவும் என்றது கோஜெக் நிறுவனம்.
கோகார், கோகார் ப்ரிமியம், கோகார் எக்ஸ்எல் என எல்லா வகை கோஜெக் கார்களுக்கும் இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும்.
வரும் மே 31ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
கம்ஃபர்ட்டெல்குரோ, டிரான்ஸ்-கேப், ப்ரைம் டாக்சி, ப்ரிமியர் டாக்சி, ஸ்ட்ரைட்ஸ் டாக்சி ஆகிய நிறுவனங்கள் இந்த மாதம் அவற்றின் டாக்சி கட்டணங்களை உயர்த்தின.