இணைய இடர் அகல மனநலக் குழு முயற்சி

சமூக ஊடகத்துடன் சேர்ந்து பணிக்குழு நடைமுறை தீர்வுகாணும்

டுவிட்­டர், இன்ஸ்­ட­கி­ராம், போன்ற சமூக ஊட­கங்­க­ளி­லும் வாட்ஸ்­அப் போன்ற தளங்­க­ளி­லும் இப்­போது இளை­யர்­கள் அதிக நேரத்­தைச் செல­வி­டு­கி­றார்­கள்.

இந்­தச் சூழ­லில், தொழில்­நுட்பத் தளங்­க­ளு­டன் சேர்ந்து இணை­யத்­தில் ஆக்­க­க­ர­மான நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­தும் வழி­க­ளைக் காணும் வகை­யில் பல அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய மன­நல சிறப்­புப் பணிக்­குழு முயன்று வரு­கிறது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங், இளை­யர் மன­ந­லம் பற்­றிய குடி­மக்கள் குழு தொடக்க நிகழ்ச்­சி­யில் நேற்று உரை­யாற்­றி­னார்.

இணை­ய துன்புறுத்தல் போன்ற ஆபத்­து­க­ளைக் களை­வ­தற்­கான நடை­முறைத் தீர்வு­களை எப்­படி உரு­வாக்­கு­வது என்­பது பற்றி அந்­தப் பணிக்­குழு ஆராயும் என்று திரு­வாட்டி சுன் கூறி­னார். அந்­தச் சிறப்­புப் பணிக்­குழு கடந்த ஜூலை­யில் அமைக்­கப்­பட்­டது. அது தனது பரிந்­து­ரை­களைச் சீர­மைத்து வரு­கிறது.

பொது­மக்­க­ளின் கருத்­து­களை வரும் மாதங்­களில் அது நாடும். அந்­தக் கருத்­து­களைக் கொண்டு மன­ந­லம் தொடர்­பான தேசிய உத்தி உரு­வாக்­கப்­படும். செயல்­திட்­ட­மும் தீட்­டப்­படும்.

மன­ந­லச் சேவை­களை எளி­தாக எட்­டு­வ­தற்­கான வழி­களை அந்­தக் குழு ஆராய்ந்து வரு­கிறது.

மனநல உதவி நாடு­வ­தில் ஏற்­படக்­கூடிய சங்­க­ட­மான உணர்வைக் குறைப்­ப­தற்­கும் அந்­தக் குழு முயலும் என்று பணிக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார்.

சுகா­தார அமைச்­சும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் அந்தச் சிறப்பு பணிக்­கு­ழுவை அமைத்து உள்ளன.

சிங்­கப்­பூ­ரில் மன­நல முயற்சி களை அந்­தக் குழு மேற்­பார்­வை­யி­டு­கிறது. பல அமைப்­பு­களும் சேர்ந்து செயல்­ப­டத் தேவை­யான அம்­சங்­களில் அது ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­கிறது.

நேற்று தொடங்­கப்­பட்ட குடி­மக்­கள் குழு, இணை­யம் வழி ஏழு நிகழ்ச்­சி­களை நடத்­தும். ரிபப்­ளிக் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த சுமார் 50 பேரை அது உள்­ள­டக்­கும்.

இளை­யர்­க­ளி­டையே மன மீள் திறனை அதி­க­மாக்­கும் வழி­கள் குறித்து அந்த நிகழ்ச்­சி­களில் கவனம் செலுத்­தப்­படும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!