கோஜெக் வாடகை கார் தொடக்க கட்டணம் கூடுகிறது

கோஜெக் வாடகை கார் தொடக்க கட்டணம் கூடுகிறது

1 mins read
fbd9faa6-d596-4df6-ad45-110897ed55ac
-

கோஜெக் வாடகை கார் நிறுவனம் இம்மாதம் 31ஆம் தேதியில் இருந்து தொடக்க கட்டணத்தைக் கூட்டுகிறது.

பத்து கி.மீட்டருக்கும் குறைந்த தூரம் செல்வோர் $0.50 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். அதைவிட அதிக தூரம் செல்வோருக்குக் கட்டண உயர்வு $0.80. ஓட்டுநர் களுக்கு உதவும் வகையில் கட்டண உயர்வு இடம்பெறு வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த உயர்வு, கோகார், கோகார் பிரிமியம், கோகார் எக்ஸ்எல் அனைத்துக்கும் பொருந்தும். இது வரும் மே 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிக் குழுமமும் டிரான்ஸ்-கேப், பிரைம் டாக்சி, பிரிமியர் டாக்சிஸ், ஸ்ட்ரைட்ஸ் டாக்சி ஆகிய நிறுவனங்களும் இந்த மாதம் முதல் அதிக கட்டணத்தை ஏற்கெனவே அறிவித்து உள்ளன.