திரு திருமதி மோகன் மொறுமொறு பிராட்டா கடை உரிமையாளர் திரு சோமசுந்தரம் மோகன் சென்ற வாரம் காலமானார்.
அவர் இறந்த ஒரு வாரத்துக்குப் பிறகு அவருடைய மனைவி சரோஜா கடையை மீண்டும் திறந்துள்ளார். இரண்டு ஆட்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
திருமதி சரோஜா முன்போல் வாடிக்கையாளர்களின் உபசரிப்பைக் கவனித்துக்கொள்கிறார். வேலையாட்கள் இருவரும் பிராட்டா போடுகிறார்கள்.
"இது என் கணவரின் ஆசை. அவர் இல்லாவிட்டாலும், நான் தொடர்ந்து கடை நடத்த அவர் விரும்பினார். என்னால் முடிந்தவரை நான் இதைச் செய்வேன்," என்று திருமதி சரோஜா ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார். "வீட்டிலே இருந்தால் கணவரைப் பற்றியே நினைத்துகொண்டிருக்கிறேன். அதனால் கடைக்கு வருகிறன்," என்றார் அவர்.
காலஞ்சென்ற திரு சோமசுந்தரம் மோகனுக்கு வயது 56.
அவரும் அவருடைய மனைவியும் திரு திருமதி மோகன் மொறுமொறு பிராட்டா கடையை எட்டு மாதங்களுக்கு முன் ஜூ சியாட்யில் உள்ள தின் யியாங் காபிக் கடையில் திறந்தனர்.

