மோசடிச் செயல்களில் அதிக இளையர்கள் ஈடுபடுகின்றனர்

மோசடிச் செயல்களில் அதிக இளையர்கள் ஈடுபடுகின்றனர்

2 mins read
e5277e01-dec2-46f9-876a-49ae7a9e5a83
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த மூவாண்­டு­களில் கைதான மோச­டிச் செயல்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள், வேறொ­ரு­வர் தவ­றான வழி­யில் ஈட்­டிய பணத்தை பிற­ரி­டம் ஒப்­படைக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­கள் ஆகி­யோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் 30 வய­துக்கு உள்­பட்­ட­வர்­கள் எனத் தெரிய வந்­துள்­ளது.

சூதாட்ட இணை­யத்­த­ளங்­கள், சமூக வலைத்­த­ளங்­களில் இடம்­பெ­றும் சில விளம்­ப­ரங்­கள் ஆகி­யவை எளி­தில் பணம் சம்­பா­திக்­க­மு­டி­யும் என்ற நம்­பிக்­கை­யைத் தரக்­கூ­டி­யவை. இவற்­றுக்கு மயங்­கும் பல இளை­யர்­கள், தவ­றான வழி­யில் ஈட்­டப்­படும் பணத்தை பிற­ரி­டம் ஒப்­ப­டைக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

சுவா சூ காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டான் வீ, இம்மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் உள்­துறை அமைச்­சுக்­கான விவா­தத்­தில் இந்த விவ­கா­ரத்தை எழுப்­பி­னார்.

2019ஆம் ஆண்­டுக்­கும் சென்ற ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதா­னோ­ரில் 1,239 பேர் 30 வய­துக்­குக் குறை­வா­னர்­கள்.

ஒரு­வரை நம்ப வைத்து அவ­ரின் தனிப்­பட்ட தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொண்டு மேற்­கொள்­ளப்­படும் பெரிய அள­வி­லான சில மோச­டிச் சம்­ப­வங்­கள் அண்­மை­யில் இடம்­பெற்­றுள்­ளன. எளி­தில் பணம் சம்­பா­திக்­கக்­கூ­டிய இத்­த­கைய செயல்­க­ளுக்கு இளை­யர்­கள் மயங்கு­வதை இது குறிக்­க­லாம் என்று திரு வீ கூறி­னார். குறிப்­பாக இணைய விளை­யாட்­டுத் தளங்­க­ளுக்­குச் செல்­லும்­போது இந்­நிலை உரு­வா­க­லாம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"எளி­தில் பணம் சம்­பா­திக்­கும் உத்­தி­களில் அவர்­க­ளின் ஆர்­வத்­தைத் தூண்­டும் பல விளம்­ப­ரங்­கள் தென்­படும்," என்று திரு வீ சொன்­னார்.

தங்­க­ளின் வங்­கிக் கணக்கு­களைக் கொ­டுத்து தனிப்­பட்ட சிங்­பாஸ் விவ­ரங்­களை மோசடிச் செயல்­களை மேற்­கொண்­டோ­ருக்­குத் தெரி­வித்த இரு­வர் அண்­மை­யில் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

கைதான ஒரு­வ­ருக்கு 19 வயது, மற்­றொ­ரு­வ­ருக்கு 25 வயது. எளி­தில் பணம் ஈட்ட அவர்­கள் இந்­ந­ட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

மோச­டிச் செயல்­க­ளின் மூலம் ஈட்­டப்­பட்ட சுமார் ஒரு மில்­லி­யன் வெள்ளி அவ்­வி­ரு­வ­ரும் விட்­டுக்­கொ­டுத்த வங்­கிக் கணக்­கில் போடப்­பட்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது. இது, அண்­மை­யில் வெளி­வந்த சில மோச­டிச் சம்பவங்களில் ஒன்று.

தவ­றான வழி­யில் ஒரு­வர் ஈட்­டிய பணத்தை வேறொ­ரு­வர் பிற­ரி­டம் ஒப்­ப­டைக்­கும் செயல்­கள் குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும். ஆனால் அவற்றில் இருக்கும் சிக்கல்களால் பெரும்­பா­லான வேளை­களில் அவை நீதி­மன்ற விசா­ரணைவரை செல்வதில்லை என்பதை நாடா­ளு­மன்­றத்­தில் திரு வீக்­குப் பதி­ல­ளித்த உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் சுட்­டி­னார்.

இதைச் சமாளிக்க 'சிடிஎஸ்ஏ' எனும் ஊழல், போதைப்பொருள் கடத்தல், இதர மோசமான குற்றங்கள் சட்டத்திற்கு இவ்வாண்டு கடைசி காலாண்டில் திருத்தங்கள் செய்யப்படும் என்று திரு டான் தெரிவித்தார்.