பாலஸ்தீன வட்டாரங்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு ஆதரவுத் திட்டத்தை வழங்குகிறது

பாலஸ்தீன வட்டாரங்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு ஆதரவுத் திட்டத்தை வழங்குகிறது

1 mins read
e3c0c751-2dc5-41e9-b82b-63aff1872bbc
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது) பாலஸ்தீன இயக்கத்தின் பிரதமர் முகம்மது ஷ்டாயேயை சந்தித்தார். படம்: வெளியுறவு அமைச்சு -

சிங்கப்பூர், 750,000 வெள்ளி மதிப்புள்ள சிறப்பு சுகாதாரப் பராமரிப்பு ஆதரவுத் திட்டத்தை பாலஸ்தீன வட்டாரங்களுக்கு வழங்கியுள்ளது. கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

ராமல்லா நகரில் இருந்த சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், பாலஸ்­தீன இயக்கத்தின் பிர­த­மர் முகம்­மது ஷ்டாயே, வெளி­யு­றவு விவ­கார அமைச்­சர் ரியாட் அல்-மால்கி ஆகி­யோ­ரைச் சந்­தித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் பாலஸ்­தீன இயக்­கத்­துக்­கும் இருக்­கும் நட்பு­மிக்க உறவை டாக்­டர் விவி­யன் மறு­வு­று­திப்­ப­டுத்­தி­னார்.