நியூயார்க்கிற்கு நேரடிச் சேவைகளை வழங்கவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

நியூயார்க்கிற்கு நேரடிச் சேவைகளை வழங்கவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read
a0b97d54-fb6c-4447-8c2b-484d725738ef
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரின் நியூ­வார்க் லிபர்ட்டி அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு மீண்­டும் நேரடி விமா­னச் சேவை­களை வழங்­க­வுள்­ளது.

முன்­ன­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் அமெ­ரிக்­கா­வுக்கு வாரந்­தோ­றும் 57 சேவை­களை வழங்­கி­யது. கொவிட்-19 சூழல் உரு­வெடுத்த பிறகு அந்த எண்­ணிக்கை மூன்­றுக்­குக் குறைக்­கப்­பட்­ட­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

வரும் ஜூன் மாதத்­திற்­குள் வாரந்­தோ­றும் அமெ­ரிக்­கா­விற்கு 62 சேவை­களை வழங்­கும் நிலை­யில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இருக்­கும். வட அமெ­ரிக்க கண்­டத்­திற்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் வழங்­கும் சேவை­க­ளின் எண்­ணிக்கை கொவிட்-19 சூழ­லுக்கு முந்­தைய காலத்­தில் பதி­வா­னதைவிட அதி­க­மாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ­யார்க்­கின் நியூ­வார்க் விமான நிலை­யத்­திற்கு அது தின­மும் மூன்று சேவை­களை வழங்­கும்.

நியூ­யார்க்­கிற்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இத்­தனை சேவை­களை வழங்­கு­வது இதுவே முதல்­முறை. அமெ­ரிக்­கா­வின் இதர பகு­தி­க­ளுக்­கும் தனது சேவை­களை நீட்­டிக்க எண்­ணம் கொண்­டுள்­ள­தா­க­வும் அது கூறி­யது.

மேலும், 12 ஆண்­டு­கள் இடை­வே­ளைக்­குப் பிறகு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் மீண்­டும் கன­டா­வுக்­குச் சேவை­களை வழங்­க­வுள்­ளது. இதன்­படி கன­டா­வின் வான்­கூ­வர் நக­ருக்கு சேவை­கள் வழங்­கப்­படும்.