லிட்டில் இந்தியாவில் அம்பலமான சட்டவிரோத புகையிலை விற்பனை

லிட்டில் இந்தியாவில் அம்பலமான சட்டவிரோத புகையிலை விற்பனை

2 mins read
7d35bb9e-6857-40cb-affe-4c3c039a3464
சந்தர் ரோட்டில் சட்டவிரோதமாக புகையிலை விற்பதற்கான நடவடிக்கை (இடது). சட்டவிரோதமாக விற்கப்படும் புகையிலை (வலது). படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

லிட்­டில் இந்­தியாவின் சாலை­க­ளி­லும் சந்­து­க­ளி­லும் சுற்றித் திரி­யும் சில ஆட­வர்­கள், கவலை இல்­லா­மல் விடு­முறை நாள்­களைக் கழிக்க நண்­பர்­க­ளைச் சந்­திக்க வந்­த­வர்­கள் போல் முத­லில் தெரி­வார்­கள்.

ஆனால் இவர்­க­ளுக்கு மிக அரு­கில் சென்­றால் இவர்களின் வாய் மென்­மை­யாக 'ஹான்ஸ் ஹான்ஸ்' போன்ற சொற்­களை அசை­போட்டுக்கொண்டிருக்கும், கண்­கள் அங்­கு­மிங்­கும் நோட்­டம் பார்க்கும்.

இவர்­கள் சிங்­கப்­பூ­ரில் சட்­ட­விரோ­த­மா­கப் புகை­யிலை விற்­கும் பெரிய இரு கட்­ட­மைப்­பைச் சேர்ந்த கள்ள வியா­பா­ரி­கள்.

பல்­வேறு இடங்­களில் மெல்­லும் புகை­யி­லைப் பொட்­ட­லங்­களை ஒளித்து வைத்து தேவைப்­படு­வோ­ருக்கு விற்­கும் அதே வேளை­யில் எங்­கி­ருந்­தா­வது அதி­கா­ரி­களோ பாது­கா­வல் அதி­கா­ரி­களோ தென்­பட்­டால், உடனே கை சைகை­கள் மூல­மாக அல்­லது குறுந்­த­க­வலின் வாயிலாக ஒரு­வரை ஒரு­வர் எச்­ச­ரிப்­பார்­கள்.

வாயில் மெல்­லும் புகை­யி­லைக்­குக் கடந்த 2016ஆம் ஆண்­டில் தடை விதிக்­கப்­பட்­டது. இருந்தாலும் இதன் விற்­பனை வழக்­க­மாக நடை­பெற்று­க்கொண்­டு­ இருப்பதாக சந்­தர், டெஸ்­கர் சாலை­களில் உள்ள சில கடைக்­கா­ரர்­கள் கூறினர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த மூன்று வாரங்களாக லிட்டில் இந்தியாவில் இந்த சட்டவிரோத மெல்லும் புகையிலை விற்பனையைக் கண்காணித்து வந்தது.

2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்­டு­வரை வீதி­களில் சட்­ட­வி­ரோ­த­மான பொருள்­கள் விற்ற 81 பேர் கைதா­யி­னர் என்று சிங்­கப்­பூர் அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது. வாயில் மெல்­லும் புகை­யி­லையை இறக்­கு­மதி செய்­த­தற்­காக 255 பேரும் அத்­த­கைய புகை­யிலை வைத்­தி­ருந்­த­தற்­காக 457 பேரும் கைதா­யி­னர்.

இந்­தப் புகை­யி­லையை விற்­ற­தற்­கா­கக் கைதான அனை­வ­ரும் வீதி­களில் புகை­யி­லையை விற்­ற­வர்­கள் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

மெல்­லும் புகை­யி­லையை இறக்­கு­மதி செய்­தாலோ விற்­றாலோ அந்த குற்­றத்­துக்கு $10,000 வரை அப­ரா­தம் அல்­லது ஆறு மாதங்­கள் சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம். அத்­த­கைய புகை­யி­லையை வாங்­கும் குற்­றத்­திற்கு அதி­க­பட்­ச­மாக $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.