கட்டடம் உறுதியாக அமைய நல்ல அடித்தளம் உதவுவதுபோல மக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெற்றிருக்க பெரிதும் உதவுகிறது மனநலம்.
படிப்பு, வேலை போன்ற அழுத்தங்களோடு கொவிட் சூழலும் தற்போது சேர்ந்துள்ளது. நண்பர்களை அடிக்கடி சந்தித்துப் பேசமுடியாததாலும் மனமாற்றத்துக்கு வெளியில் செல்ல முடியாததாலும் பலருக்கும் மனஅழுத்தம் மேலும் அதிகமாகியுள்ளது.
இச்சூழலில் மனநலனைப் பேண வேண்டியதன் அவசியத்திற்கான காரணங்களை இருவர் தங்கள் அனுபவம் மூலம் எடுத்துரைக்கிறார்கள்.

