சொந்த மகளை இழந்தவர் இன்று பலருடைய உயிர்களைக் காக்கிறார்

சொந்த மகளை இழந்தவர் இன்று பலருடைய உயிர்களைக் காக்கிறார்

2 mins read
91b02ab5-fc15-414e-af26-e57b1fe52765
-

ஆ. விஷ்ணு வர்­தினி

உயிர்­க­ளைக் காக்­கும் தாதி­யா­கப் பணி­யாற்­றும் திரு­மதி தில­க­வதி ராஜ­கோ­பா­லால், சொந்த மக­ளைக் காப்­பாற்ற முடி­யா­மல்­போன வருத்­தத்­தில் இருந்து இன்­னும் மீள முடி­ய­வில்லை. எனினும், தன் மக­ளைப் போன்று அவ­திப்­படும் இளை­யர்­களுக்கு முடிந்­த­வரை உத­வ­வேண்டும் என்ற எண்­ணம் அவருள் வேர் ஊன்­றி­யது.

திரு­மதி தில­க­வதி கடந்த ஆண்டு தம்­மு­டைய மகளை எதிர்­பாராத வகை­யில் இழந்­தார். மக­ளின் நடத்­தை­யில் மாற்­றங்­க­ளைக் கண்ட அவர், அது குறித்து விசா­ரித்­த­போது, தாம் மிகுந்த மன­­உளைச்­ச­லில் இருந்­த­தாக மகள் கூறி­யி­ருந்­தார். அதனை மேலும் ஆரா­யாத வருத்­தமே திரு­மதி தில­க­வ­தி­யின் மன­திற்­குள் ஆழ­மா­கப் பதிந்­துள்­ள­தாக அவர் வருந்தினார்.

"கொவிட்-19 சூழ­லால் பள்ளி வாழ்க்கை முடங்­கி­யது. அவள் தனி­மை­யாக இருந்­தாள். எங்­க­ளது குடும்­பம் ஒற்­று­மை­யாக இருந்­த­போ­தி­லும், நண்­பர்­க­ளு­டன் உரை­யாட முடி­யா­தது அவ­ளைப் பாதித்­தது. ஏதோ ஒரு பிரச்­சினை அவளைப் பாதித்­துள்­ளது என்று நாங்­கள் உணர்­வ­தற்­குள் காலம் கடந்துவிட்டது. அவளுக்கு உத­வ­மு­டி­யா­மல் போனது," என்­றார் திரு­மதி தில­க­வதி.

போதிய அளவு உதவவில்லையோ, ஏற்ற சூழலை உரு­வாக்­கித் தர­வில்­லையோ என்ற வருத்­தம் தம்மை அலைக்­க­ழிப்­பதாக சொன்­னார் அவர். நேரத்தை ஒதுக்கி மக­ளோடு கலந்­து­ரை­யா­டு­வ­தைத் தள்­ளிப்­போடா­மல் இருந்­தி­ருந்­தால் அவ­ரைக் காப்­பாற்றி இருக்­க­லாமோ என்­றும் அவர் எண்­ணு­கி­றார்.

தம்­மு­டைய மகள் தவ­றிய தினத்­தன்று திரு­மதி தில­க­வதி அவ­ரா­கவே இல்லை. தம்­மு­டைய மகள் வெளிப்­ப­டை­யா­கத் தமது கவ­லை­களைச் சொல்­லத் தயங்­கி­ய­தை­யும் திரு­மதி தில­க­வதி கவனித்­தார். அன்­றைய தினம் திரு­மதி தில­க­வதி உறங்­கிய இரு­பது நிமி­டங்­களில் மகளை இழந்­தார்.

"இனி நானும் ஏன் உயிர் வாழ­வேண்­டும் என்று எண்­ணி­னேன். ஒரு தாயாக என் மக­ளைப் பொறுப்­பின்றி கைவிட்­டு­விட்­டேன் என்­றெல்­லாம் சிலர் கூறி­யது என்னை நிலை­கு­லைய வைத்­தது. சமூ­கம் என்­னைக் கொலை­கா­ரி­யா­கப் பார்ப்­ப­து­போல் இருந்­தது," என்று வேத­னை­யு­டன் கூறி­னார் அவர்.

தனி­யா­கத் தவித்த மக­ளின் எண்­ண­வோட்­டம் திரு­மதி தில­க­வதி­யின் குடும்­பத்­தா­ருக்கு இன்றும் முழு­தா­கப் புலப்­ப­டாத புதி­ராக உள்ளது.

இளை­யர்­கள் குடும்­பத்­தா­ரிடம் தங்­க­ளது கவ­லை­க­ளைப் பகிர்ந்து­கொள்ள அஞ்­சக்­கூ­டாது என்­றும் அத்­த­கைய சூழ­லைப் பெற்­றோர் உரு­வாக்­கித் தர­வேண்­டும் என்­றும் கூறினார் திரு­மதி தில­க­வதி.