தொற்றுச் சம்பவங்கள் இம்மாதம் மூன்றாவது முறையாக 10,000க்குக் கீழ் குறைந்தது

தொற்றுச் சம்பவங்கள் இம்மாதம் மூன்றாவது முறையாக 10,000க்குக் கீழ் குறைந்தது

1 mins read
3c4ed268-8785-487d-ad04-66d5762ab469
சிங்கப்பூரில் மொத்தம் 1,015,017 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

சிங்கப்பூரில் புதிதாக 7,859 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இம்மாதம் தொற்றுச் சம்பவங்கள் 10,000க்குக் கீழ் குறைந்திருப்பது இது மூன்றாவது முறை.

பிப்ரவரி 7ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது எனத் தெரிவிக்கப்பட்டது. அன்று 7,806 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

தொற்றுப் பாதிப்பால் 1,605 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர். 139 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 126 பேருக்கு தொற்று உறுதியானது.

வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் தொடர்ந்து 19வது நாளாக 1க்குக்கீழ் உள்ளது. அது 0.71ஆக இருந்தது.

மார்ச் 20 நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 1,015,017 தொற்றுச் சம்பவங்களும், 1,198 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.