ஈசூனில் பெண் ஒருவரை மோதிய காட்டுப் பன்றியை தேசியப் பூங்கா வாரிய அதிகாரிகள் பிடித்துள்ளனர். அது ஈசூன் பூங்காவில் பிடிப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி பன்றி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
ஈசூன் பூங்கா மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று பன்றி பிடிக்கப்பட்ட பிறகு, பூங்காவைச் சுற்றியுள்ள தடுப்பு பலகைகள் அகற்றப்பட்டன.
காத்திப் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பகுதியில் மார்ச் 9ஆம் தேதியன்று அந்தக் காட்டுப் பன்றி ஒரு பெண் மீது மோதியதில் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து பன்றியைப் பிடிக்க ஈசூன் பூங்கா மூடப்பட்டது.


