வழக்கத்திற்கு மாறாக
பிப்ரவரியில் கனமழை
சிங்கப்பூரில் வழக்கத்திற்கு மாறாக கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக மழை பெய்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் வறண்ட மாதமாக இருப்பது வழக்கம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 3வது முறையாக சென்ற பிப்ரவரியில் கன மழை பெய்துள்ளது. சென்ற பிப்ரவரியில் 175 மிமீ மழை பதிவானது.
இது, மாதாந்திர சராசரி 105.1 மிமீ மழையைவிட கூடுதலாகும். இவ்வாண்டில் இரண்டாவது மாதமாக பிப்ரவரியில் அதிக மழை பெய்துள்ளது. அதே சமயத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் 3வது முறையாக பிப்ரவரியில் கனமழை பெய்துள்ளது. 2013ல் 395.2 மிமீ மழை பெய்தது. அதற்குப் பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் 186 மிமீ கன மழை பெய்தது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளைநோய் காலத்தில்
உலர்ந்த கண்கள் பிரச்சினை
கொவிட்-19 தொற்று காலத்தில் உலர்ந்த கண்களால் பாதிக்கப்பட்ட பலர் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். கொள்ளைநோய் பரவிய காலத்தில் முகக்கவசங்களைத் தொடர்ந்து அணிந் திருப்பது, அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்வதால் கணினித் திரையில் மூழ்கியிருப்பது, மன உளைச்சல், போதிய தூக்கமின்மை போன்றவை கண்கள் உலர்ந்து போவதற்கான காரணிகளாகும். தேசிய கண் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் மூத்த மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் லூயிஸ் டோங், கடந்த ஆண்டு கண் சிகிச்சைக்காக 323 புதிய நோயாளிகள் வந்ததாகத் தெரிவித்தார். கொள்ளைநோய்க்கு முன்பு 2019ஆம் ஆண்டில் கண் சிகிச்சைக்கு வந்த 281 புதிய நோயாளி களுடன் ஒப்பிடுகையில் இது, 15 விழுக்காடு அதிகம். 323 கண் நோயாளிகளில் 76 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் 47 பேர் நாற்பது வயதுக்கும் குறைவானவர்கள் என்று பேராசிரியர் லூயிஸ் டோங் தெரிவித்தார்.
எஸ்ஜி வருகை அட்டைக்கு
$100 வசூலிக்கப்படுகிறது
சிங்கப்பூரில் நுழைவதற்கு எஸ்ஜி வருகை அட்டை அவசியம். இதனைச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில இணையத் தளங்கள், அந்த அட்ைடக்கு விண்ணப்பிக்க நூறு வெள்ளி வரை வசூல் செய்கின்றன. இத்தகைய இணையத் தளங்கள் புதிதாக முளைத்துள்ளதாக சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்தது.
ஐசிஏயின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிங்கப்பூரர்கள் உட்பட சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தங்களுடைய உடல்நலம் உள்ளிட்ட விவரங்களுடன் எஸ்ஜி வருகை அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் வெளி நாட்டிலிருந்து செயல்படும் சில இணையத் தளங்கள் இதற்கு உதவி செய்ய 100 ெவள்ளி வரை கட்டணம் வசூலிக்கின்றன. சிங்கப்பூரின் பிரபல முக்கிய சின்னங்களான 'மெர்லயன்', கலை அறிவியல் அருங்காட்சியகம் போன்றவற்றின் படங்கள் இணையத் தளங்களில் இடம்பெற்றுள்ளதால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இச்சேவைகள் வழங்கப்படுவதாக பயணிகளுக்கு தவறான வழி காட்டப் படுகிறது.
ஆனால் இத்தயை இணையத் தளங்கள் போலியானவை அல்ல. தங்களுடைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கின்றன என்று 'விதர்ஸ் கட்டார்வோங்' சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஜோனத்தன் கோக் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் சொந்த விவரங்கள், கடவுச்சீட்டு எண், கடன் அட்டை எண் போன்றவற்றை தெரிவிப்பதால் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் நினைவூட்டினார்.
தற்போது 12 இணையத் தளங்கள் எஸ்ஜி வருகை அட்டைக்கு விண்ணப்பிக்க உதவும் சேவையை வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.

