ஹோட்டல்களுக்கு புதிய இலக்கு

ஹோட்டல்களுக்கு புதிய இலக்கு

2 mins read
f21c370c-ef6f-4c46-a4ce-e38352558f3f
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த கண்காட்சியில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கிரஸ்ட் குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிராவின் சிங் தமது நிறுவனம் தயாரித்துள்ள பசுமை சார்ந்த பொருள்களை வர்த்தக தொழில் துணை அமைச்சர் எல்வின் டானிடம் காட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கரிம வெளியேற்றத்தை 2050க்குள் முற்றிலும் ஒழிக்க திட்டம்

2050ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் ஒழிக்க சிங்கப்பூர் ஹோட்டல்களுக்கு இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு ­உள்­ளது.

இந்த இலக்கை அடைய பசு­மை சார்ந்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என இங்­குள்ள ஹோட்­டல்­க­ள் வலி­யுறுத்­தப்­பட்­டுள்­ளன.

சூரிய சக்தி தக­டு­க­ளைப் பொருத்­து­வது, உண­வுக் கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­வது, தண்­ணீ­ரைச் சேமிப்பது போன்­றவை அவற்­றில் சில.

அடுத்த ஆண்­டி­லி­ருந்து கரிம வெளி­யேற்­றத்­தின் அளவை ஹோட்­டல்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வர வேண்­டும். 2030ஆம் ஆண்­டுக்­குள் கரிம வெளி­யேற்றத்தைக் குறைக்க வேண்­டும்.

இந்த இலக்­கு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்ட ஹோட்­டல்­க­ளுக்­கான நீடித்த நிலைத்­தன்­மை­மிக்க வழி­காட்­டி­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் ஹோட்­டல்­கள் சங்­க­மும் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­க­மும் இணைந்து வழி­காட்­டியை உரு­வாக்­கி­யுள்­ளன.

ஹோட்­டல்­க­ளின் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் குறைக்க உத­வும் புதிய வழி­காட்டி உல­கி­லேயே முதன்­மை­யா­னது என நம்பப்­ ப­டு­கிறது.

மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்ற ஹோட்­டல்­ களுக்­கான நீடித்த நிலைத்­தன்மை மாநாட்­டில் பேசிய வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் எல்­வின் டான், ஹோட்­டல்­க­ளுக்­கான உத்­தி­களை வழி­காட்டி வழங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

பசுமை சார்ந்த ஹோட்­டல் எப்­படி­யி­ருக்க வேண்­டும் என்­பதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

"நீடித்த பொருள்­களை பயன் படுத்த வேண்­டும், வளங்­களை இயன்ற அளவு முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்த விவே­க­மான தானி யக்­கத் தீர்­வு­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

ஹோட்­டல்­க­ளுக்கு வரும் பய­ணி­களை சுற்­றுச்­சூ­ழ­லில் அக்­க­றை­செ­லுத்த ஊக்­கு­விக்க வேண்­டும்," என்று அவர் தெரி­வித்­ தார்.

"இவை முடி­யாத யோசனை களைக் கொண்ட கனவு அல்ல. சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து ஹோட்­டல்­களும் இதைச் செய்ய முடி­யும்," என்று மேலும் அவர் தெரி­வித்­தார்.

வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் 60 விழுக்­காடு ஹோட்­டல் அறை­கள் அனைத்­து­லக அள­வில் அங்­கீ­கா­ரம் பெற்ற நீடித்த நிலைத்­தன்­மைக்­கான சான்­றி­த­ழைப் பெற வேண்­டும் என்­றும் வழி­காட்­டி­யில் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஹோட்­டல்­க­ளின் நீடித்த நிலைத்­தன்­மை­மிக்க முயற்­சி­கள் வெற்றி பெறு­வதை உறு­திப்­ப­டுத்த நான்கு முக்­கிய அம்­சங்­களில் கவ­னம் செலுத்த வேண்­டும் என வழி­காட்டி கூறு­கிறது.

நீரைச் சேமிப்­பது, கழி­வு­களை சிறந்த வகை­யில் நிர்­வ­கிப்­பது, மறு­சு­ழற்சி மற்­றும் கழி­வு­களை உற்­பத்­திக்­கான வளங்­க­ளாக மாற்­றும் சுழற்சி முறை­யி­லான பொரு­ளி­யல் அணு­கு­முறை ஆகி­யவை நான்கு அம்­சங்­கள்.