வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி பாதை ரத்து

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி பாதை ரத்து

1 mins read
82741c65-647d-4e48-9707-c0703d09bbe7
-

வெளி­நாட்­டில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை ஏற்­பாடு ரத்து செய்­யப்பட்­டுள்­ளது.

ஆனால், இங்கு தடுப்­பூ­சி போட்டுக்கொள்ள பதிந்துகொண்டு இன்­ன­மும் சிங்­கப்­பூர் திரும்­பா­த­வர்­கள் மார்ச் 31ஆம் தேதிக்­குள் நாடு திரும்பும்­படி அறி­வு­றுத்­தப்­பட்டுள்­ளது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் அண்­மை­யில் தளர்த்­தப்­பட்­டதை யடுத்து இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சும் வெளி­யு­றவு அைமச்­சும் வெளி­யிட்ட கூட்டு அறிக்கை தெரி­வித்­தது.

வெளி­நாடுகளில் வசிக்கும் சிங்­கப்­பூ­ரர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி தடுப்­பூசி போட்­டுக்கொள்­வ­தற்­காக கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்­கான பய­ணப்­ பாதை அறிமுகப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனால் சிங்­கப்­பூ­ரர்­கள் தாங்­கள் வசிக்­கும் நாட்­டி­லேயே தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை அண்­மை­யில் குறைந்து வந்­தது என்று அறிக்கை தெரி­வித்­தது.

வெளி­நாட்­டில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் முதற்­கட்ட தடுப்­பூ­சி­களைப் போட்­டி­ருந்­தால் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள தடுப்­பூசி போட்­டுக்கொண்­டோ­ருக்­கான பாதை வழி­யாக சிங்­கப்­பூர் திரும்­ப­லாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள், வீட்­டில் தனி­மைப்ப­டுத்­திக்கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்­தும் கால­மும் ஏழு நாட்­க­ளாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.

அது மட்­டு­மின்றி, பய­ணி­கள் தாங்­கள் விரும்­பிய இடத்­தில் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­வும் அனு­ம­திக்­கப்­படுவர்.

தடுப்­பூசி பாதை ரத்து செய்­யப்பட்ட பிறகு சிங்கப்பூர் திரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப் பூரர்கள், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட விரும்­பி­னால் தனி­மைக்­கா­லத்தை முடித்த பிறகு ஏதா­வது ஒரு தடுப்­பூசி நிலை­யத்தில் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ள­லாம் என்று அறிக்கை மேலும் தெரி­வித்­தது.