ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் இடம்பெறவிருக்கும் ‘மைஸ்’ நிகழ்ச்சிகள்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு இந்த ஆண்­டின் பிற்­பா­தி­யில் நடை­பெ­ற­வி­ருக்­கும் பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வரு­கை­பு­ரி­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விடி­எல் எனப்­படும் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத்­த­டங்­கள், தளர்த்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றால் வெளி­நாட்­டுப் பார்­வை­யா­ளர்­கள் பல­ரும் இந்­நி­கழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­ளக்­கூ­டும்.

செப்­டம்­பர் மாதம் நடக்­க­வி­ருக்­கும் அறை­க­லன் கண்­காட்­சி­யில் 15 முதல் 20 நாடு­க­ளைச் சேர்ந்த 20,000 பேர் பங்­கு­பெ­றக்­கூ­டும்.

ஃபுட்&ஹோட்­டல்­ஏ­ஷியா செப்­டம்­ப­ரில் ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் உணவு, பானக் கண்­காட்­சி­யில் ஏறக்­கு­றைய 35,000 பேர் கலந்­து­கொள்­வர் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அக்­டோ­பர் மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் ஹோட்­டல்­கள், உண­வ­கங்­கள் போன்­ற­வற்­றுக்­கான நிகழ்ச்­சி­யில் 30,000 பேர் வரை பங்குகொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மார்ச் 15ஆம் தேதி சிங்­கப்­பூர் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யது. அதன்படி, நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும் இடங்­களில் 50 விழுக்­காட்­டுப் பார்­வை­யா­ளர்­கள் இருக்­க­லாம். பார்­வை­யா­ளர்­க­ளைத் தனித்­த­னிப் பகு­தி­களில் பிரித்து அனு­ம­திக்­க­வும் தேவை­யில்லை.

விடிஎல் பயணிகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுச் சோதனைக்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

மேற்பார்வையின்றி சுயபரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறை, கூடுதலான வர்த்தகப் பேராளர்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் 2022 எனும் நிகழ்ச்சியிலும் தூய்மையான சுற்றுச்சூழல் உச்சநிலை மாநாடு சிங்கப்பூர் எனும் நிகழ்ச்சியிலும் மொத்தம் 15,000க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமிப் பரவலுக்குப் பிறகு கூடுதலானோர் நேரடியாகக் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகளாக அவை அமையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!