வாகன விபத்து இழப்பீட்டைக் கணக்கிடும் புதிய முறை

வாகன விபத்து இழப்பீட்டைக் கணக்கிடும் புதிய முறை

1 mins read
1a2dd937-c7f2-481c-bec4-012c98de261d
-

வாகனமோட்டிகள், விபத்து நேர்ந்தால் சேதத்துக்கான இழப்பீடாக எவ்வளவு தொகையைக் கோரலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான புதிய நடைமுறை அறிமுகம் கண்டுள்ளது.

'மாகோ' எனப்படும் பாவனை விபத்து இணையத்தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும். பத்தே நிமிடங்களில் அவர்கள் சட்டரீதியாகக் கோரக்கூடிய தொகையைத் தெரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் நீதிமன்றங்களும் சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகமும் இணைந்து அந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன.

தற்போது நடப்பில் இருக்கும் சட்டங்களைக் கருத்தில்கொண்டு இது தொகையைக் கணக்கிடுகிறது.

விபத்துகளில் தொடர்புடைய தரப்புகளுக்குள் இழப்பீடு தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவினால் ஒருவர் மற்றவர்மீது வழக்கு தொடுக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய இது உதவுகிறது.