வடிவமைப்பு போட்டிகளில் எஸ்டிக்கு ஏழு விருதுகள்

வடிவமைப்பு போட்டிகளில் எஸ்டிக்கு ஏழு விருதுகள்

1 mins read
b76958cb-93db-4d4f-914c-7dfadb0b113c
-

அச்­சுச் செய்தி வடி­வ­மைப்­புக்­கான உல­க­ளா­விய போட்­டி­களில் இந்த ஆண்டு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏழு விரு­து­களை வென்­றுள்­ளது. செய்தி வடி­வ­மைப்பு மற்­றும் செய்­தி­யைக் காட்­சிப்­ப­டுத்தி சொல்­லும் முறை ஆகி­ய­வற்­றுக்­கான 'ஆஸ்­கர்' விரு­து­க­ளாக அவை கரு­தப்­ப­டு­கின்­றன.

'வொண்­டர் உமன்' படக்­கதை கடந்த 80 ஆண்­டு­களில் கண்­டுள்ள உரு­மாற்­றத்­தைச் சித்­தி­ரிக்­கும் தக­வல் வரை­க­லைப் படம், சென்ற ஆண்டு நிகழ்ந்த முக்­கி­ய­மான 21 நிகழ்ச்­சி­க­ளைத் தொகுத்­துத் தந்த வரை­க­லைப் படம் உள்­ளிட்ட, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் மொத்­தம் 21 செய்தி வடி­வ­மைப்­பு­கள் இம்­முறை பாராட்டு பெற்­றுள்­ளன. உல­கெங்­கும் இருந்து நிய­ம­னம் பெற்ற ஏறத்­தாழ 3,500 விண்­ணப்­பங்­களில் இருந்து 27 நடு­வர்­கள் விரு­துக்­கு­ரிய செய்­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­த­னர். நியூ­யார்க் டைம்ஸ், வாஷிங்­டன் போஸ்ட், உள்­ளிட்­டவை விரு­து­பெற்ற முக்­கிய ஊட­கங்­களில் அடங்­கும்.