கொவிட்-19 விதிமீறல்: மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதிமீறல்: மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3cc36772-5cd6-4e4d-b7cc-1dcc3b0a4c09
-

கிளார்க் கீ வட்­டா­ரத்­தில் கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தாக மேலும் நால்­வர் மீது குற்­றம் சுமத்­தப்­படும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

புத்­தாண்­டுக்கு முதல் நாளன்று கிளார்க் கீ வட்­டா­ரத்­தில் 19 வய­துக்­கும் 22 வய­துக்­கும் இடைப்­பட்ட இந்த நால்­வ­ரும் விதி­

மு­றைக்கு உட்­பட்டு நடக்­க­வில்லை என்று நம்­பப்­ப­டு­கிறது.

இது­தொ­டர்­பான மேலும் மூவ­ருக்­குத் தலா $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. கிளார்க் கீ வட்­டா­ரத்­தில் நிகழ்ந்த புத்­தாண்டு ஒன்­று­கூ­ட­லின்­போது கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றையை மீறிய­தற்­காக 14 பேர் மீது குற்­றச்­சாட்டு சுமத்தப்­பட்­டுள்­ளது அல்­லது சுமத்தப்­பட இருக்­கிறது.

குற்­றம் சுமத்­தப்­பட்ட ஆட­வர்­கள் சிலர் முறையாக முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை. சிலர் பாதுகாப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­க­வில்லை.