சிங்கப்பூரில் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது

சிங்கப்பூரில் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது

1 mins read
acd32445-58e0-4db6-a40b-937955126ea6
சிங்கப்பூரில் மொத்தம் 1,022,555 தொற்றுச் சம்பவங்களும், 1,208 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.  (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் புதிதாக 7,538 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

தொற்றுப் பாதிப்பால் 1,062 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 25 பேர் உள்ளனர். 145 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொவிட்-19க்கு மேலும் பத்து பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 144 பேருக்கு தொற்று உறுதியானது.

வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் தொடர்ந்து 20வது நாளாக 1க்குக்கீழ் உள்ளது. அது 0.72ஆக இருந்தது.

மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 1,022,555 தொற்றுச் சம்பவங்களும், 1,208 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.