99,000 முதலாளிகளுக்கு $840மி. சம்பள உதவித்தொகை

99,000 முதலாளிகளுக்கு $840மி. சம்பள உதவித்தொகை

1 mins read
e9851969-e911-42f3-b28e-5345a430e76d
கொவிட்-19 சூழ்நிலையில் சம்­பள உத­வித்­தொகைத் திட்­டத்­தின் கீழ் $2 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சம்­பள உத­வித்­தொகைத் திட்­டத்­தின் கீழ் 99,000க்கு மேற்­பட்ட சிங்­கப்­பூர் முத­லா­ளி­கள் $840 மில்லியன் மதிப்­புள்ள உத­வித்­தொகையைப் பெறவுள்ளனர்.

இம்மாதம் இறுதிக்குள் இந்த இறுதிதொகை வழங்கீட்டை அவர்கள் பெறுவர்.

சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் சம்பளம் கொடுக்கும் முதலாளிகளின் செல­வு­களை ஈடு­கட்ட அவர்களுக்கு உத­வித்­தொகை வழங்­கப்­படுகிறது.

அடுத்தக்கட்ட வழங்குதொகை மூலம் 2021, 2020, 2019ஆம் ஆண்டுகளில் ஊழியர்களுக்கு அளித்த சம்பள உயர்வில் 15 விழுக்காட்டை அரசாங்கம் இணைத் தொகையாக வழங்கும். அதி­க­ரித்து வரும் சம்­பள கட்­ட­ணங்­க­ளைச் சமா­ளிக்க இத்­தொகை உத­வும்.

இந்தத் தொகை, 5,000 வெள்ளி வரை சம்பளம் ஈட்டும் 780,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு முதலாளிகள் வழங்கிய சம்பள உயர்வுக்கு ஈடானதாகும்.

இதன் மூலம் 99,000 மேற்பட்ட முதலாளிகள் பயனடைவர் என்று நிதி அமைச்சும், உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யமும் தெரிவித்தன.

இந்த உ­த­வித் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற முத­லா­ளி­கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் தொகை குறித்த விவ­ரங்­க­ள் அடங்கிய கடி­தங்­களை இம்­மாத இறுதிக்குள் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.