தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியத் தின அணிவகுப்பு 2022 மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்

1 mins read
e5e88f8a-16ef-4fe0-abc7-a611bb35f8a1
பலநோக்குத் திடல், உடற்பயிற்சிக்கான இடம், தேசிய சேவையின் பரிணாம வளர்ச்சியைச் சித்தரிக்கும் கலைக்கூடம் உள்ளிட்ட அம்சங்கள் 'என்எஸ்' சதுக்கத்தில் இடம்பெறும் (படம்: தற்காப்பு அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைப்பு, வோஹா கட்டடக்கலை நிறுவனம்) -

இவ்வாண்டு தேசியத் தின அணிவகுப்பு மீண்டும் மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்.

மிதக்கும் மேடைக்குப் பதில் என்எஸ் சதுக்கம் என்ற ஒரு புதிய நிரந்தர இடத்தைக் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால, அணிவகுப்பு அங்கு நடக்கும்.

இது குறித்த தகவல்களைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

தொற்று சூழ்நிலையால் என்எஸ் சதுக்கக் கட்டுமானப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மிதக்கும் மேடையில் இறுதியாக ஒரு முறை தேசியத் தின அணிவகுப்பு இடம்பெறும் என்று அவர் பதிவிட்டிருந்தார். நிலம், ஆகாயம், நீர் ஆகிய அம்சங்களையொட்டிய படைப்புகளைக் காண தாம் ஆவலாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக என்எஸ் சதுக்கம் 2025ஆம் ஆண்டுக்குற் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 சூழ்நிலையால் கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன. கட்டுமானப் பணிகள் குறித்த மேல் தகவல்கள் கூடியவிரையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.