வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரியில் அதிக மழை

வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரியில் அதிக மழை

1 mins read
e1042430-fe9f-44b0-afa8-094065606a2e
-

சிங்கப்பூரில் வழக்கத்திற்கு மாறாக கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக மழை பெய்தது.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் வறண்ட மாதமாக இருப்பது வழக்கம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 3வது முறையாக சென்ற பிப்ரவரியில் அதிக மழை பெய்தது. சென்ற பிப்ரவரியில் 175 மில்லிமீட்டர் மழை பதிவானது.

இது, மாதாந்திர சராசரி 105.1 மில்லிமீட்டர் மழையைவிட கூடுதலாகும். ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில் அதிக மழை பெய்தது. கடந்த பத்து ஆண்டுகளில் 3வது முறையாக பிப்ரவரியில் அதிக மழை பெய்தது.

2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் 395.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் 186 மில்லிமீட்டர் மழை பெய்தது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.