5 மணிநேர முற்றுகைக்குப் பிறகு இருவர் கைது

5 மணிநேர முற்றுகைக்குப் பிறகு இருவர் கைது

1 mins read
d6594edb-a844-4ff1-8944-73fea3842406
தங்கள் 77 வயது தயாரடன் சந்தேக நபர்கள் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டனர் (படம்: சின் மின் நாளிதழ்) -
multi-img1 of 2

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவர் ஐந்து மணிநேர முற்றுகைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் ஆடவர்கள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவ்விரண்டு சகோதரர்களைக் கைது செய்தனர்.

அங் மோ கியோ அவென்யூ எட்டு புளோக் 508யில் உள்ள வீட்டை இன்று காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

அதிகாரிகள் கதவைத் திறக்க உத்தரவிட்டபோது, அதைச் செய்ய ஆடவர்கள் மறுத்தனர்.

வீட்டில் சந்தேக நபர்களின் தாயாரும் இருந்ததால், அவர்கள் மூவரின் நலனைக் கருதி சிறப்புப் படை அதிகாரிகள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.

போதைப் பொருள் நடவடிக்கை, வன்முறையைப் பயன்படுத்த மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக அந்த 52வயது, 53 வயதான சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.