ரொட்டி விலை அதிகரிப்பு

ரொட்டி விலை அதிகரிப்பு

1 mins read
ded6d2f8-a238-4491-8d20-ec079a7864ef
-

சிங்கப்பூரின் பேரங்காடிகளிலும் சில ரொட்டி தயாரிப்பு நிலையங்களிலும் இந்த ஆண்டு தொடக்கக்தில் இருந்து ரொட்டி விலை அதிகரித்துள்ளது.

ரொட்டியைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை கூடியிருப்பதும் வர்த்தகம் தொடர்பான இதர செலவுகள் அதிகரித்திருப்பதும் அதற்குக் காரணங்கள் என்று கூறப்பட்டது.

400 கிராம் முதல் 600 கிராம் வரையிலான எடை கொண்ட பிரபல நிறுவனங்களின் ரொட்டிப் பொட்டலங்கள் 10 காசில் இருந்து 20 காசு வரை விலை கூடியுள்ளன.

கிருமிப் பரவல் மற்றும் தயாரிப்புப் பொருள்களின் விலை கூடியதால் வேறு வழியின்றி விலையை உயர்த்த நேர்ந்ததாக தயாரிப்பாளர்கள் கூறினர்.