கிளார்க் கீ வட்டாரத்தில் புத்தாண்டு ஒன்றுகூடலின்போது கொவிட்-19 பாதுகாப்பு விதி
முறைகளை மீறியதாக மேலும் நால்வர் மீது குற்றம் சுமத்தப்
பட்டுள்ளது.
விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்ளத் தவறியதாக லீ ஹெர்ன் சிங், வர்கீஸ் டிவின், ஆடம் அப்துல்லா, அசிடிக் சுரானி ஆகிய நால்வர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இவர்கள் நால்
வரும் 19 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
குறைந்தது ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதாகவும் முகக்கவசம் அணியாமல் இருந்ததாகவும் வர்கீஸ், ஆடம், அசிடிக் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதாகவும் ஐவருக்கும் அதிகமானோருடன் ஒன்றுகூடியதாகவும் லீ மீது குற்றம் சுமத்தப்பட்டது. அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று லீ மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
வர்கீஸ் அடுத்த மாதம் 12ஆம் தேதியிலும் ஆடம் அடுத்த மாதம் 19ஆம் தேதியிலும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் வழக்குக்கு முந்திய கலந்துரையாடலில் அசிடிக்
முன்னிலைப்படுத்தப்படுவார்.
இந்த நால்வரையும் சேர்த்து கிளார்க் கீ வட்டார புத்தாண்டு ஒன்றுகூடல் தொடர்பாக இதுவரை 14 பேர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தெரிவித்தது.

