சிங்கப்பூரின் ஏறத்தாழ 40 விழுக்காடு கரிம வெளியேற்றத்துக்கு அதன் எரிசக்தி துறை காரணமாக இருக்கிறது. ஆனால் தூய்மையான எரிசக்தியை கூடுதலாக இறக்குமதி செய்வதன் மூலம் 2050ஆம் ஆண்டுக்குள் நாடு கரிம வெளியேற்றம் முற்றிலும் இல்லாத நிலையை எட்டலாம் என்று புதிதாக வெளியிடப்பட்டுள்ள எரிசக்தி 2050 குழு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை எரிசக்தி சந்தை ஆணையம் வெளியிட்டது.
சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்புக்கும் கட்டுப்படியான விலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கரிம வெயேற்றம் அறவே இல்லாத நிலையை எட்டலாம் என்று ஆணையம் கூறியது.
வட்டார எரிசக்தி கட்டமைப்பு களிடமிருந்து தூய்மையான எரிசக்தியை கூடுதலாக இறக்குமதி செய்வது, 'கிளீன் பர்னிங் ஹைட்ரோஜன்' அணுகுமுறைக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற
பரிந்துரைகளை அறிக்கை முன்வைத்துள்ளது.
தற்போது இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் பெரும்பாலான எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக கரிம வெளியேற்றம் ஏற்படுகிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு இது பங்களிக்கும்.

