பசிபிக் வட்டார அமெரிக்க ராணுவப் படையின் தளபதி ஜெனரல் சார்ல்ஸ் ஃபிலின் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்தார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஜெனரல் ஃபிலின்னும் டாக்டர் இங்கும் கலந்துரயாடினர்.
இருநாடுகளுக்கிடையிலான நீண்டகாலத் தற்காப்பு நல்லுறவை இருவரும் மறுஉறுதி செய்தனர்.
சிங்கப்பூரின் ராணுவத் தலைவர்களையும் ஜெனரல் ஃபிலின் சந்தித்துப் பேசினார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட 'சென்ஸ் அண்ட் ஸ்ட்ரைக்' தலைமையகத்துக்குச் சென்ற ஜெனரல் ஃபிலின்சிங்கப்பூரின் ராணுவ ஆற்றலைப் பார்வையிட்டார்.

