கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
3e41ac94-36a1-48f1-8d6f-99103ffd0cf7
-

பிரிட்­ட­னில் விடு­மு­றைக்­குச் சென்­றி­ருந்­த­போது தனது மனை­வி­யைக் கொன்­ற­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள சிங்­கப்­பூர் ஆட­வர், நோக்­க­மில்­லாக் கொலைக்­குத் தான் கார­ண­மாக இருந்­த­தாக ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

50 வயது ஃபாங் சூங் ஹெர்ட், மார்ச் 18ஆம் தேதி பிரிட்­ட­னில் உள்ள நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணையை எதிர்­நோக்­கி­னார். அப்­போது, தன் மனை­வி­யான 51 வயது பெக் யிங் லிங்­கைத் தான் கொலை­செய்­த­தா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை மறுத்த அவர், அது மர­ணம் விளை­வித்த நோக்­க­மில்­லாக் கொலை என்று ஒப்புக்கொண்­டார்.