பொது கேளிக்கை இடங்களிலும், இரவுநேர கேளிக்கை விடுதிகளிலும் நடத்தப்பட்ட இரண்டு வாரச் சோதனைகளில் 32 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் 26 பேர் ரகசிய கும்பல் உறுப்பினர்கள் என நம்பப்பகிறது. அவர்கள் 16 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இந்த 26 பேரைக் கைது செய்தபோது, பிரச்சினை தந்த ஒரு ஆடவரும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் காவல் துறையால் தேடப்பட்டுவந்த இரண்டு நபர்களும் இந்தச் சோதனையில் பிடிப்பட்டனர்.
பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 100 விடுதிகள் சோதனையிடப்பட்டன.
குற்றப் புலனாய்வுப் பிரிவும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இணைந்து இந்த அதிரடிச் சோதனைகளை நடத்தின.
கைதுசெய்யப்பட்ட 32 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள், ரகசிய கும்பல்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 5,000 வெள்ளி அபராதம், மூவாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.


