பிரதமர் லீ கொவிட்-19 நிலவரம் குறித்து நாளை உரையாற்றுவார்

பிரதமர் லீ கொவிட்-19 நிலவரம் குறித்து நாளை உரையாற்றுவார்

1 mins read
b62ec8ae-0334-4a55-a38b-356a507b6996
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம் குறித்து நாளை காலை 11 மணிக்கு உரையாற்றுவார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் முன்னேறியிருப்பதாகவும், ஓமிக்ரான் அலை குறைந்திருப்பதாகவும் பிரதமர் லீ தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் தொற்று நிலவரம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பற்றி தாம் பேசுவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவருடைய உரை ஸ்ரெய்ட்ஸ் டைம்சின் இணையப்பக்கம், பேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பிரதமரின் பேஸ்புக் பக்கம், மீடியகார்ப் ஒளிவழிகள் ஆகியவற்றிலும் உரையைக் காணாலாம்.

தொற்றுப் பரவல் தொடங்கியதிலிருந்து திரு லீ ஆற்றவிருக்கும் ஒன்பதாவது உரை இது.