மின்னிலக்கமயமாகும் ஆசியான்

மின்னிலக்கமயமாகும் ஆசியான்

2 mins read
e1b7491c-4d63-41ff-909d-815c32763508
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆசி­யான் வட்­டா­ரத்­தில் மின்­னிலக்க­ம­ய­மா­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களில் சிங்­கப்­பூர் மிக­வும் முக்­கி­ய­மான பங்கை வகிப்­ப­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார். இந்த வட்­டா­ரத்­தில் மின்­னி­லக்க ரீதி­யாக சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கும் தொடர்­பு­கள் உள்ளிட்டவை இதற்கான முக்­கி­ய கார­ணங்­கள் என்று திரு கான் சொன்­னார்.

வட்­டார அள­வில் மின்­னி­லக்க அம்­சங்­களை வலுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் இதர ஆசி­யான் உறுப்பு நாடு­களு­டன் இணைந்து செயல்­பட ஆர்­வத்­து­டன் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"வர்த்­தக ரீதி­யாக நாம் மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தற்கு (இதர ஆசி­யான் நாடு­களும்) மின்­னிலக்­கப் பரி­வர்த்­த­னை­க­ளைக் கையா­ளும் ஆற்­றல்­க­ளைக் கொண்­டி­ருக்­க­வேண்­டும், அத­னால் சிங்­கப்­பூர் மட்­டும் மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தில் பய­னில்லை.

"ஆகை­யால் இதில் ஒன்­றாக வளர்ந்து இந்­தப் பய­ணத்தை ஒன்று­பட்டு மேற்­கொள்­ள­வேண்­டும்," என்று திரு கான் கூறி­னார்.

அர­சாங்­கங்­கள் ஒன்­று­டன் ஒன்று ஒத்­து­ழைப்­பது மட்­டு­மின்றி, நிறு­வ­னங்­களும் தங்­க­ளுக்­கான மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் முயற்­சி­களைத் தொடர்ந்து எடுக்­க­வேண்­டும் என திரு கான் சுட்­டி­னார். இதன் தொடர்­பில் அர­சாங்­கங்­களுக்­கி­டையே இருக்­கக்­கூ­டிய ஒப்­பந்­தங்­களை நிறு­வ­னங்­கள் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்­பதை அவர் எடுத்­துச்­சொன்னார்.

ஆசி­யான் மாநாட்­டின் ஓர் அங்­கத்­தில் திரு கான் பேசி­னார். மரீனா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலை­யத்­தில் நான்கு நாள்­க­ளுக்கு நடை­பெ­றும் 'சிங்­கப்­பூர் ஏபெக்ஸ் பிஸ்­னஸ் சம்­மிட்' நிகழ்ச்­சி­யின் ஓர் அங்­க­மாக ஆசி­யான் மாநாடு நடை­பெற்­றது.

நாளை நிறை­வ­டை­யும் இந்­நிகழ்ச்­சிக்கு சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­ன­மும் 'எம்பி சிங்­கப்­பூர்' நிறு­வ­ன­மும் ஏற்­பாடு செய்­துள்­ளன.

மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் உலகை மாற்­றப்­போ­கிறது.

அத­னால் இதற்­கான முயற்­சி­களை சிங்­கப்­பூர் இப்­போதே எடுப்­பது நல்­லது என்­பதை­யும் அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

பசு­மைப் பொரு­ளி­ய­லின் தொடர்­பில் ஓர் ஒப்­பந்­தத்தை வரைய சிங்­கப்­பூர் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது. கூடு­தல் நாடு­கள் பசு­மைப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தங்­களை உரு­வாக்­கும் என்ற நம்­பிக்­கையை சிங்­கப்­பூர் கொண்­டுள்­ளது என்­றும் திரு கான் சொன்­னார்.

கரி­மப் பயன்­பாட்­டைக் குறைப்­பது போன்ற சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த முயற்­சி­களை எடுப்­ப­தற்கு பசு­மைப் பொரு­ளி­யல் ஒப்­பந்­தங்­களுக்­கான கட்­ட­மைப்பு வகை­செய்­யும் என்று அவர் சொன்­னார்.

'ஆசியான் மின்னிலக்க ஒருங்கிணைப்பு முயற்சிகளில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது'