இசையுலகில் இரண்டாவது ஆகப் பெரிய இசை நிறுவனமான சோனி இசைக் குழுமம், தென்கிழக்காசிய வட்டாரத்துக்கான அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது.
கேளிக்கை, தொழில்நுட்பம், திறனாளர்கள் ஆகிய அம்சங்களுக்கான நடுவமாக இது விளங்கும். வட்டார இசை மற்றும் திறனாளர்களை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வது புதிய நடவடிக்கையின் நோக்கம் என்று சோனி இசைக் குழுமம் கூறியது. இதன் மூலம் தனது முதலீடும் இந்த வட்டாரத்துடனான பிணைப்பும் அதிகரித்திருப்பதாக அது சொன்னது.

