ஆளில்லா வானூர்தியில் உணவு விநியோகம்

ஆளில்லா வானூர்தியில் உணவு விநியோகம்

1 mins read
5cd02abc-e4b5-4a25-ba6d-46b3aafa203b
செந்தோசாவின் தஞ்சோங் கடற்கரையில் இருந்து உணவுப் பொட்டலத்துடன் ஆளில்லா வானூர்தி புறப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செயின்ட் ஜான்ஸ் தீவுக்­குச் செல்­லும் பய­ணி­கள் செந்­தோ­சா­வில் இருந்து உணவு, பானங்­களை ஆளில்லா வானூர்தி மூலம் தருவிக்­கும் வாய்ப்பு விரை­வில் கிடைக்­கக்­கூ­டும். அதற்­கான முன்­னோ­டிச் சோத­னைத் திட்­டம் ஏப்­ரல் 9ஆம் தேதி தொடங்­க­வி­ருக்­கிறது.

செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம், எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங், ஃபுட்பாண்டா ஆகி­யவை இணைந்து அந்த முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளன.

முன்­னோ­டித் திட்­டத்­தில் செயின்ட் ஜான்ஸ் தீவின் தேசிய கடல்­துறை ஆய்­வுக்­கூ­டம் மற்­றும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் கடல்­ துறை நீர்­வே­ளாண்மை நிலையத்­தின் ஊழி­யர்­கள் தங்­கள் உணவுத் தெரி­வைப் பெற்­றுக்­கொள்வர்.

செந்­தோசா, விவோ­சிட்டி ஆகிய இடங்­களில் செயல்­படும் இரு­ப­துக்­கும் அதி­க­மான உணவு, பானக் கடை­களில் இருந்து ஃபுட்பாண்டா செய­லி­யைப் பயன்­ப­டுத்தி அவர்கள் உணவை வாங்­கிக்­கொள்­ள­லாம்.

செந்­தோ­சா­வின் தஞ்­சோங் கடற்­ க­ரை­யிலிருந்து புறப்­படும் ஆளில்லா வானூர்­தி­கள் அந்த உணவை ஏழு நிமி­டத்­தில் செயின்ட் ஜான்ஸ் தீவில் கொண்டு­சேர்க்­கும்.

ஒவ்­வோர் ஆளில்லா வானூர்­தி­யும் பத்து கிலோ­கி­ராம் வரை­யி­லான எடை­யைத் தூக்­கிச்­செல்­லும். இருப்­பி­னும் அதற்­குச் சில கட்­டுப்­பா­டு­கள் உள்­ளன.

பெரிய அள­வி­லான உண­வுப் பொட்­ட­லங்­களை ஆளில்லா வானூர் ­தி­யில் பொருத்­து­வது சிரமம்.

போத்­தல்­களில் விற்­கப்­படும் பானங்­கள் மட்­டுமே சிந்­தா­மல் வாடிக்­கை­யா­ள­ரைச் சென்­ற­டை­யும்.