ஜிஎஸ்டி தில்லுமுல்லு: நகைக்கடை இயக்குநருக்கு $104,400 அபராதம்

ஜிஎஸ்டி தில்லுமுல்லு: நகைக்கடை இயக்குநருக்கு $104,400 அபராதம்

1 mins read
fe33f753-db5c-41a7-bf1f-528702c1950c
-

சுற்­றுப்பய­ணி­கள் சட்டவிரோ­த­மான முறை­யில் ஜிஎஸ்டி வரியைத் திரும்ப பெறு­மாறு செய்­யும் ஒரு சதித்­திட்­டத்­தில் சம்­பந்­தப்­பட்டு இருந்த நகைக்­கடை இயக்­கு­நர் ஒரு­வ­ருக்கு நேற்று $104,400 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

மொத்­தம் $16,975 ஜிஎஸ்டி வரியைச் சுற்­றுப் பய­ணி­கள் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் திரும்­பப் பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்ட வழக்­கில் 'அதிர்ஷ்­டம் ஜுவல்­லரி' நகைக்­க­டை­ இயக்குநர் வூ சின் சாய் என்­ப­வ­ரும் அவ­ரு­டைய சகாக்­களும் சம்­பந்­தப்­பட்டு இருந்­த­னர்.

அந்த ஜிஎஸ்டி வரி 2015 முதல் 2016 வரை திரும்பப் பெற்­றுக்­கொள்­ளப்பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜிஎஸ்டி வரி விதி­மு­றை­களுக்குக் கீழான பல குற்­றங்­களை வூ, 61, ஒப்­புக்­கொண்­டார்.

வூ, 2015 மார்ச் மாதத்­திற்­கும் 2016 மே மாதத்­திற்­கும் இடை­யில் தன் வேலை­யி­டத்­தில் இருந்­த­போது சில சகாக்­க­ளு­டன் சேர்ந்து வெளி­நாட்­டு­கா­ரர்­கள் ஐந்து பேர் சட்டவிரோத முறை­யில் ஜிஎஸ்டி தொகையைத் திரும்பப் பெற உதவு­வ­தற்குத் திட்­டம் போட்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது.

கோதண்­ட­ரா­மன் ஞானம், கருணா­நிதி ராஜேஷ், கரு­ணா­நிதி சர­வ­ணன், ராமை­யன் கார்த்­தி­கேயன், வைத்­தி­ய­லிங்­கம் கரு­ணா­நிதி ஆகிய அந்த ஐந்து இந்­திய நாட்­ட­வர்­க­ளுக்­கும், அவர்­கள் செய்த குற்­றச் செயல்­க­ளுக்­காக 2017ல் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.