பொழுதுபோக்கு, இரவு நேர கேளிக்கை விடுதிகளில் குற்றச்செயல்களைத் துடைத்து ஒழிக்கும் நோக்கத்துடன் அதிகாரிகள் இரண்டு வார காலம் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து 32 பேர் கைதாகி விசாரிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் 26 பேர், 16க்கும் 41க்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆடவர்கள்.
சட்டவிரோத கும்பல்களில் அவர்களுக்குத் தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. இதர மூன்று பேரில் ஒருவர் ஆடவர். இரு பெண்கள். ஆடவர்கள் 26 பேரையும் அதிகாரிகள் கைது செய்தபோது அந்த ஆடவர் பிரச்சினையாக இருந்தார் எனக் கூறப்பட்டது.
அதிகாரிகள் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதிவரை பல இடங்களிலும் சோதனை நடத்தினர். மொத்தம் 364 பேர் விசாரிக்கப்பட்டனர். 100 இடங்கள் சோதிக்கப்பட்டன.
ஆயுதம் வைத்திருந்ததன் தொடர்பில் 24 வயது ஆடவர் ஒருவர் கைதானார். காவல்துறை தேடிவந்த 29, 32 வயதுள்ள இரு ஆடவர்களும் அந்த நடவடிக்கையின்போது சிக்கினர். உளவுத் துறையின் குண்டர்கும்பல் ஒழிப்புப் பிரிவுத் தலைமையில் சோதனை நடந்தது.

