உணவு, பானக் கடைகளில் இரவு 10.30 மணிக்குப் பிறகு மதுபானம் விற்பதற்கும் அருந்துவதற்கும் மார்ச் 29ஆம் தேதிமுதல் அனுமதி வழங்கப்படும்.
மேலும், அனைத்து உணவு, பானக் கடைகளிலும் நேரடி நிகழ்ச்சிகள் தொடர அனுமதி அளிக்கப்படும். உணவு, பானக் கடைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையும் பதிவுசெய்யப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளையும் திரையிடவும் அனுமதி வழங்கப்படும்.
பிரதமர் லீ சியன் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்திலும் இந்த அறிவிப்புகள் வெளியாகின.