தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காசநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2021ல் குறைந்தது

1 mins read
5bb534d8-d1f2-4ec7-9295-922cc911c1a2
-

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் காசநோய் குறைந்தது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது.

உலக காசநோய் தினத்தையொட்டி வியாழக்கிழமை (மார்ச் 24) அமைச்சு அறிக்கை வெளியிட்டது. சிங்கப்பூர்வாசிகளிடையே சென்ற ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,306 ஆக இருந்தது. இது, 2020ல் 1,360 ஆக இருந்தது என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

காசநோய் காற்று மூலம் பரவக் கூடியதாகும். காச நோயாளியுடன் ஒருவர் அணுக்கமாக, நீண்டகால தொடர்பில் இருந்தால் அந்த நோய் அவருக்கும் பரவிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்