செய்திக்கொத்து

கொவிட்-19 மாத்திரை கிடைக்கும்

மருத்துவமனைகளின் சுமை குறையும் என்பதால் கொவிட்-19 தொற்றுக்குச் சமூக அளவில் சிகிச்சை அளித்து குணப்படுத்த சிங்கப்பூர் முயல்கிறது.

இந்த முயற்சியை ஒட்டி 'பாக்ஸ்லொவிட்' என்ற மாத்திரை இப்போது மூன்று பலதுறை மருந்தகங்களிலும் பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் (PHPCs) கிடைக்கும். அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிங்கப்பூரின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் இது பற்றி அறிவித்தார். அந்த மருந்தகங்களில் இருந்து பல தகவல்களும் பெறப்படும். பிறகு இந்த மருந்தைப் படிப்படியாக இதர மருந்தகங்களிலும் பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த மருந்துதான், சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகரித்து உள்ள முதல் கொவிட்-19 மாத்திரை ஆகும்.

மொழிப்பாட வகுப்பில் விதிவிலக்கு

சிங்கப்பூர் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. இந்த நிலையில், கல்வி கற்க அதிக ஆதரவு தேவைப்படக் கூடிய மாணவர்கள் மொழிப்பாட வகுப்புகளில் முகக் கவசத்தை அணிய வேண்டிய கட்டாயம் இனி இருக்காது.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இதனை அறிவித்தார்.

காது கேளாத பிரச்சினை, பேசுவதில் சிரமம், இடமாறு தோற்றப்பிழை போன்ற கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் இவர்களில் அடங்குவர் என்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு தெரிவித்தது.

இருந்தாலும்கூட மார்ச் 29ஆம் தேதி முதல் வகுப்பறைக்குள், நூலகத்திற்குள் இருக்கையில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.கைக்குழந்தைக்கு அனுமதி

சிங்கப்பூரில் ஒன்று முதல் இரண்டு வயதுள்ள கைக்குழந்தைகளுக்கு கொவிட்-19 கிருமி தொற்றினால் அந்தக் குழந்தைகளை வீட்டிலேயே குணமடைய அல்லது மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் பராமரிப்பில் குணமடைய அனுமதிக்கலாம்.

கொவிட்-19 நடைமுறை-2ஐ இந்த வயது கைக்குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் நீட்டிப்பது இன்று முதல் நடப்புக்கு வரும் என்று நேற்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் இளையர் விழா உண்டு

சிங்கப்பூர் இளையர் விழா இந்த ஆண்டில் நடக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று அமைச்சுகள்நிலை கொவிட்-19 செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

வெளிநாட்டுத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் மீண்டும் ஏற்படுத்தவும் பள்ளிக்கூடங்களுக்கு ஊக்கமூட்டப்படும் என்று அவர் கூறினார். நல்ல நிலையிலான சமூக மன எழுச்சி, மொழி கற்றல், வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட தங்கள் சகாக்களுடன் கலந்துறவாட வாய்ப்பு ஆகிய மாணவர்கள் மேம்பாடு தொடர்பான மூன்று அம்சங்களிலும் கல்வி அமைச்சு அக்கறை கொண்டு உள்ளதாகக் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 காரணமாக வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளால் மாணவர்களிள் நீண்டகால மேம்பாடு பாதிக்கப்படக்கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற அமைச்சர், மாணவர்களின் கற்றல் தேவைகளை மேலும் சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளை அமைச்சு சரிசெய்யும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் காசநோய் குறைந்தது

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் காசநோய் குறைந்துவிட்டது. இது சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

உலக காசநோய் தினத்தையொட்டி நேற்று அமைச்சு அறிக்கை வெளியிட்டது. சிங்கப்பூர்வாசிகளிடையே சென்ற ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,306ஆக இருந்தது. இது 2020ல் 1,360ஆக இருந்தது என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

காசநோய் காற்று மூலம் பரவக்கூடியதாகும். காச நோயாளியுடன் ஒருவர் அணுக்கமாக, நீண்டகால தொடர்பில் இருந்தால், அந்த நோய் அவருக்கும் பரவி விடக் கூடிய வாய்ப்பு உண்டு. உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!