இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கான கடல் வழிப் பயணம் ஏப்ரல் 1 முதல் எளிமையாக்கப்படும். வாராந்திர பயணிகளுக்கான வரம்பு அகற்றப்படும். விடிஎல் பயணப்பாதை படகுகள் என்று தனிப்பட்ட ஏற்பாடுகள் இருக்காது.
தரையிறங்கும்போது பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டிய தேவையும் இனி இருக்காது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாரும் புறப்படுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும்.
தனிமை உத்தரவு இல்லாமல் அவர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

